தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: ரியா முகத்திரையை கிழித்த கார்த்திக்.. அலறும் ஆனந்த்.. குளிறும் தீபா.. - கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai deepam: ரியா முகத்திரையை கிழித்த கார்த்திக்.. அலறும் ஆனந்த்.. குளிறும் தீபா.. - கார்த்திகை தீபம் அப்டேட்

Kalyani Pandiyan S HT Tamil
Jun 17, 2024 06:43 PM IST

Karthigai deepam: ரியா மதுவிடம் பேசிய வீடியோவை காட்டி அவளை பற்றிய உண்மையை உடைக்கின்றனர். மேலும், பரமேஸ்வரி பாட்டி இருப்பதால், இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம் என்றும் கூறுகின்றனர். - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai deepam: ரியா முகத்திரையை கிழித்த கார்த்திக்.. அலறும் ஆனந்த்.. குளிறும் தீபா.. - கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai deepam: ரியா முகத்திரையை கிழித்த கார்த்திக்.. அலறும் ஆனந்த்.. குளிறும் தீபா.. - கார்த்திகை தீபம் அப்டேட்

ட்ரெண்டிங் செய்திகள்

வசமாக சிக்கிய ரியா

கார்த்திக், மீனாட்சியை அடைத்து வைத்திருக்கும் இடத்தை கண்டுபிடித்து, ரவுடிகளுடன் சண்டையிட்டு அவளை காப்பாற்றி வெளியே அழைத்து வந்தான். மறுபக்கம் மண்டபத்தில் பரமேஸ்வரி பாட்டி வந்திருக்க, எல்லோரும் ஜோடி ஜோடியாக ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என முடிவு செய்து, தயாராக நிற்கின்றனர். ரியா, ஆனந்தத்துடன் சேர்ந்து ஆசீர்வாதம் வாங்க தயாராகிறாள்.

பரமேஸ்வரி பாட்டி, ரியாவை பார்த்து யார் இது என்று கேள்வி எழுப்புகிறாள். அதற்கு தீபா அது ஆனந்த்தோட ஃப்ரெண்ட் என பிளேட்டை மாற்றி விடுகிறாள். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ரியா, எதுவும் பேச முடியாமல் நிற்கிறாள். அதன் பிறகு, கார்த்திக் மீனாட்சியுடன் மண்டபத்திற்கு வந்து விட, ரியா பேரதிர்ச்சி அடைகிறாள்.

இதைத்தொடர்ந்து கார்த்திக் மற்றும் தீபா, ஆனந்தை தனியாக அழைத்து சென்று, ரியா மதுவிடம் பேசிய வீடியோவை காட்டி அவளை பற்றிய உண்மையை உடைக்கின்றனர். மேலும், பரமேஸ்வரி பாட்டி இருப்பதால், இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம் என்றும் கூறுகின்றனர். இதனைக்கேட்ட ஆனந்த் அமைதியாக வெளியே வருகிறான்.

பிறகு அருண் - ஐஸ்வர்யா, ஆனந்த் - மீனாட்சி மற்றும் கார்த்திக் - தீபா ஆகியோர் ஜோடி ஜோடியாக காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகின்றனர்‌. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன? 

ரியா மதுவை பார்க்க வர, மது தற்கொலை செய்வதற்காக செட்டப் ஒன்றை ஏற்பாடு செய்து, கேமராவையும் ஆன் செய்து வைத்து விட்டான். இதையடுத்து வீட்டுக்கு வந்த ரியாவிடம், நான் தற்கொலை பண்ணிக்க கூடாதுன்னா என் கூட வந்து வாழு. என்கிட்ட இப்ப 10 லட்சம் ரூபாய் இருக்கு, நாம அதை வச்சுக்கிட்டு சந்தோஷமா வாழலாம் என்று சொன்னான்.

அதற்கு ரியா என்னது 10 லட்ச ரூபாயா? நான் பல கோடிக்கு சொந்தக்காரி ஆகப் போறேன். கூடிய சீக்கிரம் அபிராமி மற்றும் அருணாச்சலத்தை முதியோர் இல்லத்துக்கு அனுப்பி, கார்த்திக் அருண் ஆகியோரை வீட்டை விட்டு வெளியே தள்ளி, அந்த மொத்த சொத்துக்கும், சொந்தக்காரியாக போகிறேன். அதுக்குத்தான் ஆனந்த காதலிக்கிற மாதிரி நடிச்சுக்கிட்டு இருக்கேன். அப்படி இருக்கும்போது, நீ 10 லட்ச ரூபாய்க்கு என்னை வானு கூப்பிடுற என்று பேசிவிட்டு, அங்கிருந்து கிளம்பிச்சென்றாள்.

அடுத்ததாக, ரியா பேசிய வீடியோ ஆதாரத்துடன் மது மண்டபத்துக்கு வந்தான். தொடர்ந்து அவன் ஐஸ்வர்யாவின் மீது மோத, இவனைப் பார்த்த ஐஸ்வர்யா, இவன் எதுக்கு இங்கு வந்தான் என்று யோசித்தாள். பிறகு ரியாவிடம் நீ இருந்து போயிடு என்று சொல்ல, அவள் நான் சவால் விட்ட மாதிரி பரமேஸ்வரி பாட்டி கால்ல ஆனந்தத்தோட சேர்ந்து நான் தான் ஆசீர்வாதம் வாங்குவேன் என்று சொன்னாள்.

அடுத்ததாக மது கார்த்திகை சந்தித்து, வீடியோ ஆதாரத்தை கொடுக்க, கார்த்திக் ஆனந்தை போன் பண்ணி வரவைத்து வீடியோ ஆதாரத்தை காட்ட போகும் சமயத்தில் ரியா அவனுக்கு போன் செய்து, மீனாட்சியை கடத்தி வச்சிருக்கேன். அவ உயிரோட வேணும்னா நீ எந்த விஷயத்தையும் சொல்லக்கூடாது என்று மிரட்டினாள். இதனால் கார்த்திக் ஆனந்திடம் உண்மையை சொல்லாமல், சும்மா தான் வர சொன்னேன் என்று சமாளித்து விட்டான். 

பிறகு ரியா மண்டபத்துக்கு வந்துவிட, கார்த்திக் அப்போ மீனாட்சி பக்கத்துல இங்கே தான் கடத்தி வச்சிருக்கா என்று கணக்கு போட்டு, மதுவுடன் கிளம்பிச் சென்றான். இதற்கிடையே, ரியா தீபாவை சந்தித்து, உன் புருஷனால என்னை ஒன்னும் பண்ண முடியாது என்று சவால் விட்டாள். பதிலுக்கு தீபா என் புருஷன் உன் முகத்தை நீ கிழிச்சு, ஜெயிலுக்கு அனுப்ப தான் போறாரு என்று சவால் விட்டாள். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.