தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Karthigai Deepam Serial Latest Episode Today Update

Karthigai Deepam: தீபாவுக்காக அபிராமி எடுத்த முடிவு..பல்ப் வாங்கிய ஐஸ்வர்யா..நடந்தது என்ன?- பரபரக்கும் கார்த்திகை தீபம்!

Karthikeyan S HT Tamil
Feb 28, 2024 03:15 PM IST

தீபாவுக்காக அபிராமி எடுத்த முடிவு, ஏற்றி விட்டு பல்ப் வாங்கிய ஐஸ்வர்யா, நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் இதோ..!

கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம்

ட்ரெண்டிங் செய்திகள்

அதாவது தீபா ரியாவை பார்த்து விட அபிராமியிடம் இதோ வந்துடுறேன் என்று சொல்லி அவளை பின்தொடர்ந்து செல்ல ஓரிடத்தில் ரியாவை மிஸ் செய்து விடுகிறாள். உடனே கார்த்திக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல சரி விடுங்க தீபா, ஏரியா எங்கன்னு தெரிஞ்சிடுச்சுல நம்ம பசங்களை வச்சி தேடிக்கலாம் என்று சொல்கிறார்.

பிறகு தீபாவை பிக்கப் செய்து அழைத்து வர அபிராமி சுமங்கலி பூஜை செய்யும் போதே தீபாவுக்கு தாலி பிரித்து போட்டுடலாம், தீபாவோட அப்பா தர்மலிங்கமும் இதை பத்தி சொல்லி இருந்தாருல என்று சொல்ல பக்கத்தில் இருந்த ஐஸ்வர்யா ஏற்றி விட வாயப்பு கிடைச்சிருச்சி என்று பிளான் போடுகிறாள். கார்த்தி அபிராமியிடம் தீபாவை கூட்டிட்டு போய் நானே தாலி வாங்கி தரேன் என்று சொல்ல அபிராமியும் சம்மதம் சொல்கிறாள்.

இவர்கள் கிளம்பியதும் ஐஸ்வர்யா பார்த்தீங்களா அத்தை தீபா சொல்றத அப்படியே கேட்குறான் என்று ஏத்தி விட அபிராமி நீ சொல்றதை வச்சி நான் தீபா கிட்ட சண்டை போடணும், இதனால் எனக்கும் கார்த்திக்கும் மனஸ்தாபம் வரணும், அதானே உன் ஆசை என்று ஐஸ்வர்யாவை பிடித்து திட்டி உன் வேலையை மட்டும் பாரு என்று எச்சரிக்கிறார்.

அடுத்து தீபாவும் கார்த்திக்கும் நகை கடைக்கு வருகின்றனர். தீபா கார்த்தியையே தாலியை செலெக்ட் செய்ய சொல்ல அவன் நீங்க தான் போட்டுக்க போறீங்க, உங்களுக்கு பிடித்த மாதிரியே எடுங்க என்று சொல்ல தீபாவும் தாலியை செலக்ட் செய்கிறாள். மறுபக்கம் ரியா தனது வீட்டில் ஆனந்திடம் தாலியை காட்டி இதை தான் நீங்க என் கழுத்தில் நாளைக்கு கட்ட போறீங்க என்று பேசி கொண்டிருக்க மீனாட்சி போன் செய்ய ஆனந்த் கடுப்பாகிறான்.

சுமங்கலி பூஜைக்கு ஆனந்தை வீட்டிற்கு அழைக்க சும்மா சும்மா எதுக்கு போன் பண்ற? நான் வேலையா இருக்கேன் என்று திட்டி போனை வைக்கிறான். ரியாவும் நான் ஆனந்த் கிட்ட பேசும் போதெல்லாம் இவை போன் பண்ணிடுறா என்று கடுப்பாகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்