கடத்தப்பட்ட மகேஷ்;ரேவதி நிச்சயத்தில் காத்திருந்த அதிர்ச்சி; சடைந்து உட்கார்ந்த சாமூண்டீஸ்வரி கார்த்திகை தீபம் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கடத்தப்பட்ட மகேஷ்;ரேவதி நிச்சயத்தில் காத்திருந்த அதிர்ச்சி; சடைந்து உட்கார்ந்த சாமூண்டீஸ்வரி கார்த்திகை தீபம் அப்டேட்

கடத்தப்பட்ட மகேஷ்;ரேவதி நிச்சயத்தில் காத்திருந்த அதிர்ச்சி; சடைந்து உட்கார்ந்த சாமூண்டீஸ்வரி கார்த்திகை தீபம் அப்டேட்

Kalyani Pandiyan S HT Tamil
Dec 24, 2024 12:00 PM IST

கடத்தப்பட்ட மகேஷ்;ரேவதி நிச்சயத்தில் காத்திருந்த அதிர்ச்சி; சடைந்து உட்கார்ந்த சாமூண்டீஸ்வரி என கார்த்திகை தீபம் சீரியலில் இன்று நடந்தது என்ன என்பதை பார்க்கலாம்.

கடத்தப்பட்ட மகேஷ்;ரேவதி நிச்சயத்தில் காத்திருந்த அதிர்ச்சி; சடைந்து உட்கார்ந்த சாமூண்டீஸ்வரி கார்த்திகை தீபம் அப்டேட்
கடத்தப்பட்ட மகேஷ்;ரேவதி நிச்சயத்தில் காத்திருந்த அதிர்ச்சி; சடைந்து உட்கார்ந்த சாமூண்டீஸ்வரி கார்த்திகை தீபம் அப்டேட்

கார்த்திக் பல்வேறு இடங்களில் மகேஷை தேடி அலைந்தான். கடைசியாக மண்டபத்திற்கு வந்த அவன், மகேசை காணவில்லை என்று சொல்ல, சாமுண்டீஸ்வரி அதிர்ச்சி அடைந்தாள். மறுபக்கம் மாயா எல்லாம் கைகூடி வர நேரத்துல, இவன் எங்க போனான் என மகேஷை நினைத்து குழப்பம் அடைந்தாள்.

இதற்கிடையில், சிவனாண்டி உன் பொண்ணு கல்யாணத்தை நடத்திக்காட்ட வேண்டும் என்று சவால் விட்டாய். இப்ப என்ன ஆச்சு என கை தட்டி சிரிக்க, சாமுண்டீஸ்வரி சொன்னபடி சொன்ன தேதியில் என் பொண்ணுக்கு கல்யாணம் நடக்கும் என மீண்டும் சவால் விடுகிறாள். மகேஷ் காணாமல் போன வருத்தத்தால் ரேவதி அப்செட் ஆகி உள்ளே சென்றுவிட, அவளது தோழிகள் ரேவதியை சமாதானம் செய்ய முயற்சி செய்கின்றனர்.

அதைத்தொடர்ந்து சந்திரகலா கையில் மகேஷ் போன் கிடைக்க, அதில் அவனும், மாயாவும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை பார்க்க, சந்திரா கலா இவர்களுக்கு இடையே இருக்கும் உறவைப் பற்றி அறிந்து கொள்கிறாள். அதோடு ஒரு குழந்தையை கூப்பிட்டு போனை கொடுத்து சிவனாண்டியிடம் கொண்டு போய் கொடுக்க சொல்கிறாள். மகேஷ் மாயா இடையே இருக்கும் உறவு குறித்து சிவனாண்டிக்கும் தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

கார்த்திக் உள்ளே வந்து பார்க்க, ஆதாரங்கள் அனைத்தும் தீயில் எரிய இதற்கெல்லாம் பின்னாடி யாரோ ஒருவர் இருக்கிறார் என சந்தேகப்பட்டான். வேறு வழியில் உண்மையை கண்டுபிடிக்கலாம் என திட்டம் போட்டான்.

இதைத்தொடர்ந்து, நிச்சயதார்த்தத்திற்காக ரேவதி ஒரு பக்கம் மகேஷ் ஒரு பக்கம் என ரெடியாகி கொண்டிருந்த நிலையில், பரமேஸ்வரி பாட்டி ரேவதி நிச்சயதார்த்தத்திற்கு நான் கொண்டு வந்த புடவையை தான் கட்டிக்கிட்டு, மணமேடை ஏறணும்; முருகா அதுக்கு நீ தான் ஒரு வழி பண்ணனும் என வேண்ட முருகன் என்ன பாட்டி எல்லாத்துக்கும் என்னையே கூப்பிடுவியா? புடவையை மாற்றி வை, நீ யோசிச்சு ஏதாவது செய்.. எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று கூறினான்.

அதேபோல் பரமேஸ்வரி பாட்டி யாருக்கும் தெரியாமல் புடவையை மாற்றி வைத்து விடுகிறாள் பிறகு ரேவதி, புடவையை கட்டுவதற்காக எடுக்க புடவை மாறி இருப்பதை பார்த்து குழப்பம் அடைந்தாள். ஆனாலும், இதைத்தான் கட்டிக்கிட்டு மணமேடைக்கு போகணும் போல என நினைத்து புடவையை கட்டிக்கொண்டாள்.

மறுபக்கம் மகேஷ் ரூமில் ரெடியாகி கொண்டிருந்த நிலையில், சந்திரகலா அவனை தலையில் அடித்து மயங்க வைத்தாள். பிறகு சிவனாண்டி ஆட்கள் அவனை கடத்தி சென்றனர். இங்கே ரேவதி நிச்சயத்துக்கு ரெடி ஆகி மணமேடை ஏற, அவள் கட்டியிருக்கும் புடவையை பார்த்து எல்லோரும் குழப்பம் அடைந்தனர். சாமுண்டீஸ்வரியும் குழப்பம் அடைந்தாள்.

பிறகு மாப்பிள்ளையை மேடைக்கு அழைத்து வர சொல்ல, மகேஷ் காணவில்லை என்பது தெரியவந்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சாமுண்டீஸ்வரி எல்லாத்துக்கும் காரணம் சிவனாண்டி தான் என நினைத்து, அவன் சட்டையை பிடித்து சத்தம் போட, சிவனாண்டி எனக்கு எதுவும் தெரியாது. நான் இங்கதான் இருக்கேன் என சொல்ல சாமுண்டீஸ்வரி கார்த்தியை கூப்பிட்டு மகேஷை தேட கூறினாள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.