கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 3 எபிசோட்: வழுக்கி விழுந்த வில்லி.. கலசத்துடன் என்ட்ரி கொடுக்கும் பரமேஸ்வரி பாட்டி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 3 எபிசோட்: வழுக்கி விழுந்த வில்லி.. கலசத்துடன் என்ட்ரி கொடுக்கும் பரமேஸ்வரி பாட்டி

கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 3 எபிசோட்: வழுக்கி விழுந்த வில்லி.. கலசத்துடன் என்ட்ரி கொடுக்கும் பரமேஸ்வரி பாட்டி

Aarthi Balaji HT Tamil
Published Jun 03, 2025 02:32 PM IST

கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 3 எபிசோட்: மண்டபத்தில் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்துடன் இருக்க பரமேஸ்வரி பாட்டி கலசத்துடன் மண்டபத்திற்கு கிளம்பி வருகிறாள்.

கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 3 எபிசோட்: வழுக்கி விழுந்த வில்லி.. கலசத்துடன் என்ட்ரி கொடுக்கும் பரமேஸ்வரி பாட்டி
கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 3 எபிசோட்: வழுக்கி விழுந்த வில்லி.. கலசத்துடன் என்ட்ரி கொடுக்கும் பரமேஸ்வரி பாட்டி

அதாவது, சிவனாண்டி விருமனுக்கு போன் போட்டு கார்த்திக் கலச பூஜைக்கு வந்தால் தகவல் கொடுக்க சொல்லி சொல்கிறான்.

இதை தொடர்ந்து இங்கே மண்டபத்தில் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்துடன் இருக்க பரமேஸ்வரி பாட்டி கலசத்துடன் மண்டபத்திற்கு கிளம்பி வருகிறாள்.

இந்த விஷயம் கார்த்திக்கு தெரிய வர பாட்டி வரும் சமயத்தில் சந்திரகலா இங்கு இருக்கக் கூடாது என திட்டமிட்டு வாழைப்பழம் தோலை கீழே போட்டு அவளை வழுக்கி விழ வைக்கின்றனர். பிறகு மயில்வாகனம் சந்திர கலாவை ஹாஸ்பிடல் அழைத்துச் சென்று எக்ஸ் - ரே, ஸ்கேனிங் என எல்லாவற்றையும் எடுக்க வைத்து நேரத்தை தாமதப்படுத்துகிறான்.

இங்கே மண்டபத்தில் இளையராஜாவும் இங்கும் அங்குமாக நடந்தபடி இருக்க பரமேஸ்வரி பாட்டி கலசத்துடன் மண்டபத்திற்குள் நுழைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.