Karthigai Deepam Serial: கார்த்திக்கிற்கு புது டாஸ்க் கொடுத்த சாமுண்டேஸ்வரி.. கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai Deepam Serial: கார்த்திக்கையும் ரேவதியையும் சம்பந்தப்படுத்தி வெளியாகும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கார்த்திக்கிற்கு சாமுண்டீஸ்வரி புது டாஸ்க் கொடுத்துள்ளார்.

Karthigai Deepam Serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டேஸ்வரி சிவனாண்டி வீட்டிற்கு சென்று அவனை திட்டி விட்டு வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
பரவும் வதந்தி
கார்த்திக்கையும், ரேவதியையும் தொடர்ந்து படுத்தி பலரும் பல வதந்திகளை கூறி வருகின்றனர். இதனால் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் வருத்தத்தில் உள்ளனர். இதைப் பாரத்த சாமுண்டேஸ்வரி இதை பத்தி எல்லாம் நீங்க கவலைப்பட கூடாது. தைரியமா இருக்கனும். எனக்கு என் பொண்ணு மேலயும் ட்ரைவர் மேலயும் நம்பிக்கை இருக்கு என்று சொல்கிறாள்.
கார்த்திக்கிற்கு டாஸ்க்
அடுத்து கார்த்தியை தனியாக அழைத்தாள். அப்போது உன் மேல ஒரு பழி விழுந்திருக்கு.. அதோட உண்மையை நீ தான் கண்டு பிடித்து உன் மேல தப்பு இல்லனு நிரூபிக்கணும் என்று சொல்கிறாள். கார்த்தியும் அதற்கு சரி என்று சம்மதம் சொல்கிறாள்.
மறுபக்கம் சந்திரகலா மாயாவை பார்க்க வந்து இதெல்லாம் உன் வேல தானே என்று கேட்க மாயா ஆமாம் என்று சொல்கிறாள். கார்த்திக் ஒவ்வொரு முறையும் நல்ல பேர் எடுத்துட்டே போறான். நாளைக்கு கல்யாணத்தில் உங்கள பத்தி உண்மை தெரிந்தா சாமுண்டேஸ்வரி கார்த்தியை தாலி கட்ட சொல்ல வாய்ப்பிருக்கு.
சந்தேகத்தை விதைக்கும் மாயா
சாமுண்டேஸ்வரி அப்படி ஒரு முடிவு எடுத்தா கூட ரேவதி ஒத்துக்க கூடாது. அவ மனசுல கார்த்தியை பத்தி சந்தேகத்தை விதைக்கும் என்று சொல்கிறாள். இதை தூரத்தில் இருந்து கவனித்த மகேஷ் சந்திரகலா சென்றதும் அவங்க சொல்றது உண்மை தான், ரேவதி மனதில் சந்தேகத்தை விதைக்கணும் என்று சொல்கிறான்.
புலம்பும் கார்த்திக்
இங்கே கார்த்திக் மயில் வாகனத்திடம் என்னை இந்த வீட்டை விட்டு வெளியே துரத்த நிறைய சதி நடக்குது, இதுல சந்திரகலாவுக்கும் பங்கு இருக்கு என்று சொல்கிறான். சந்திரகலா ரேவதியை அழைத்து சென்று இந்த ட்ரைவரை நம்பாத.. அக்கா சொன்னதும் உன் கழுத்தில மோதிரம் போட தயாராகிட்டான். உன் கழுத்தில் தாலி கட்டவும் திட்டம் போடலாம் என்று மூட்டி விட முயற்சி செய்கிறாள்.
கல்யாணம் மூலம் பதிலடி
பிறகு ரேவதிக்கு ஸ்டுடியோவில் இருந்து போன் செய்து நிச்சயதார்த்த ஆல்பம் ரெடியாகி விட்டதாக சொல்ல ரேவதி அதை வாங்க கிளம்பகிறாள். அப்போது சாமுண்டேஸ்வரி கார்த்தியை அழைத்து செல்ல சொல்கிறாள். இதைக் கேட்ட சந்திரகலா ஏற்கனவே இவங்களை பத்தி ஊர் தப்பா சொல்லுது என்று சொல்கிறாள்.
உடனே சாமுண்டேஸ்வரி ஊர் உலகத்துல ஆயிரம் பேசுவாங்க.. அதை சரி செய்ய தானே மகேஷ்க்கும் ரேவதிக்கும் கல்யாணம் நடக்க போகுது என பதிலடி கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

டாபிக்ஸ்