Karthigai Deepam: கார்த்திக் யார் என்பதை அறிந்த ராஜ ராஜன்.. இனி நடக்கப் போவது என்ன? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: கார்த்திக் யார் என்பதை அறிந்த ராஜ ராஜன்.. இனி நடக்கப் போவது என்ன? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

Karthigai Deepam: கார்த்திக் யார் என்பதை அறிந்த ராஜ ராஜன்.. இனி நடக்கப் போவது என்ன? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

Malavica Natarajan HT Tamil
Published Feb 07, 2025 05:23 PM IST

Karthigai Deepam: கார்த்திக் தன் தங்கை மகன் என்பதை அறிந்த ராஜ ராஜன், அவனை உடனே பார்க்க வேண்டும் என ஏங்குகிறார். இந்நிலையில், கார்த்திகை தீபம் சீரியலில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Karthigai Deepam: கார்த்திக் யார் என்பதை அறிந்த ராஜ ராஜன்.. இனி நடக்கப் போவது என்ன? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்
Karthigai Deepam: கார்த்திக் யார் என்பதை அறிந்த ராஜ ராஜன்.. இனி நடக்கப் போவது என்ன? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

அதாவது, வீட்டுக்கு வந்தது ராஜராஜன் கார்த்தியை வெளியே போக சொல்கிறார். அவர் யாருனு தெரிந்தா இப்படி சொல்லுவீங்களா என்று மயில் வாகனம் உண்மையை சொல்ல போக கார்த்திக் தடுத்து விடுகிறான்.

சாமுண்டீஸ்வரியிடம் கேள்வி

அடுத்ததாக சாமுண்டீஸ்வரி சாப்பிட உட்காரும் சமயத்தில் மயில் வாகனம், அத்தை நீங்க இப்படி செய்திருக்க கூடாது.. ட்ரைவர் எத்தனையோ நாள் இந்த வீட்டில் இருந்து இருக்கான். அவன் ஒருமுறையாவது நம்ம பொண்ணுகிட்ட இப்படி நடந்து இருக்கானா? தப்பா ஒரு பார்வையாவது பார்த்து இருப்பானா என்று கேள்வி கேட்கிறான்.

உண்மையை சொன்ன மயில் வாகனம்

பிறகு ராஜராஜன் தனியாக இருக்கும் போது அங்கு வரும் மயில்வாகனம் அந்த ட்ரைவர் தம்பி யார் தெரியுமா? உங்க தங்கச்சி அபிராமியோட பையன். ராஜா சேதுபதி ஊர்ல கோவில் கும்பாபிஷேகத்தை உங்க கையால் நடத்தி வைக்கணும்.. இந்த குடும்பத்தை ஒன்னு சேர்க்கணும் என்பதற்காக தான் இங்க வந்திருக்காரு என்ற விஷயத்தை உடைக்கிறான்.

வருந்தும் ராஜராஜன்

இந்த விஷயம் அறிந்ததும் ராஜராஜன் என் தங்கச்சி பையனா? இந்த சொத்துக்கெல்லாம் சொந்த காரனா? என் மருமகன் அவன்.. அவனை இப்பவே பார்க்கணும் என வருத்தப்படுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணதவறாதீர்கள்.

கார்த்திக்கிற்கு வந்த நெருக்கடி

முன்னதாக கார்த்திக்கை பழிவாங்க நினைத்த மாயா, பணத்தேவை இருக்கும் ஒரு காதல் ஜோடியை கூப்பிட்டு அவர்களுக்கு பணம் கொடுத்து, கார்த்திக் ரூமுக்கு சென்று, அவன் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி விட்டதாக வெளியே ஓடி வர வேண்டும் என்று சொல்கிறாள். பிறகு அந்தப் பெண் கார்த்திக் ரூமுக்குள் செல்ல, இதை ராஜ ராஜன் பார்த்து விடுகிறார். கொஞ்ச நேரத்தில் அந்த பெண் கார்த்திக் தன்னை கெடுத்து விட்டதாக சொல்லி சத்தம் போட்டபடி வெளியில் வருகிறாள்.

பஞ்சாயத்தில் சம்பவம்

இதை பார்த்த மக்கள், கார்த்திக்கை குற்றவாளி என நினைத்து பஞ்சாயத்தை கூட்டுகின்றனர். ஆனால், என் வீட்டு டிரைவர் கார்த்திக் தப்பானவர் இல்லை என சாமுண்டீஸ்வரி கூறிய போதும், அதனை சிவணாண்டி சாமுண்டீஸ்வரிக்கு எதிராக திருப்பி விட்டான்.

இதற்கிடையில், பஞ்சாயத்தில் கார்த்திக் அறைக்கு அந்தப் பெண் போனதை பார்த்த சாட்சி இருக்கிறதா எனக் கேட்ட நிலையில், ராஜ ராஜன் தான் அதைப் பார்த்ததாக கூறியதால் கார்த்திக்கிற்கு எதிரான ஆதாரம் வலுவானது. இதனால், கார்த்திக்கை ஊரை விட்டு வெளியே அனுப்புமாறு தீர்ப்பு வந்தது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.