Karthigai Deepam: தீபா குறித்து கார்த்திக்கு கிடைத்த தகவல்.. போன் காலால் கதி கலங்கும் ரம்யா
Karthigai Deepam: இளையராஜா, மாணிக்கம் ஆகியோர் சேர்ந்து தீபாவை தேட தொடங்கிய நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Karthigai Deepam: கார்த்திகை தீபம் வீகென்ட் எபிசோட் அப்டேட் பற்றி பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக், இளையராஜா, மாணிக்கம் ஆகியோர் சேர்ந்து தீபாவை தேட தொடங்கிய நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சாமியார் வேடத்தில் ரியா
அதாவது, ரியா சாமியார் வேடத்தில் இருக்க அங்கு வந்த ஐஸ்வர்யா நீ சூப்பர் வேலை பண்ண, தீபாவை தூக்கின மாதிரி அடுத்து மீனாட்சியை தூக்கி காலி பண்ணு.. அப்படியே ஒவ்வொருத்தரா தீர்த்து கட்டிடு, என் புருஷனை மட்டும் விட்டுடு என்று சொல்ல ரியா நான் எல்லாரையும் கொன்னுட்டு ஜெயிலுக்கு போகணும், நீ இங்க சொகுசா வாழணுமா என்று கேட்டு ஷாக் கொடுக்கிறாள்.
மேலும் நான் தீபாவை கடத்தல என்று சொல்ல ஐஸ்வர்யா யாரோ ஒரு சாமியாரை நம்பி தான் தீபா போய் இருக்கா என்ற விஷயத்தை சொல்ல ரியா சந்தோசப்படுகிறாள். இதையடுத்து காட்டம்மன் கோவிலில் தீபா காட்டப்படுகிறாள். சாமியார் அவளது கையை பிடித்து மந்திரத்தை சொன்னதும் அவளுக்குள் ஏதோ ஒரு எனெர்ஜி உருவானது போல் பீல் பண்ணுகிறாள்.
ரம்யாவுக்கு போன் போட்ட தீபா
இதையடுத்து சாமியார் பரிகாரத்தை செய்ய தொடங்கலாம் என்று சொல்ல தீபா ரம்யாவுக்கு போன் போட்டு எங்க இருக்க? என்று விசாரிக்க நீ எங்க இருக்க என்று கேட்க தீபா கோவிலில் இருக்கும் விஷயத்தை சொல்ல ரியா கோவிலுக்கு கிளம்பி வருகிறாள். தீபாவை கூட்டி கொண்டு பரிகாரம் செய்யும் இடத்திற்கு கிளம்பி செல்கிறாள்.
மறுபக்கம் கார்த்திக் மைதிலிக்கு போன் செய்து தீபா குறித்து விசாரிக்க செங்கல்பட்டு பக்கத்தில் இருக்க சாமியாரை பார்க்க போய் இருக்கா, ஆனால் பரிகாரம் பத்தி எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்ல கார்த்திக் இளையராஜாவிடம் செங்கல்பட்டு சாமியார் குறித்து கேட்க எனக்கு அங்க இருக்க முனீஸ்வரன் கோவில் பூசாரி ஒருத்தரை தெரியும். அவரை போய் பார்த்தா நமக்கு தகவல் கிடைக்கும் என்று சொல்கிறான்.
இதையடுத்து கார்த்திக் ரம்யாவுக்கு போன் செய்ய காரில் தீபாவுடன் இருக்கும் அவள் வாந்தி வருவதாக சொல்லி வெளியே வந்து போனை அட்டென்ட் செய்து பேச அவன் தீபாவை பற்றி விசாரிக்கிறான், எனக்கு எதுவும் தெரியல என்று ரம்யா சொல்ல செங்கல்பட்டு சாமியார் குறித்து விசாரிக்க ரம்யா ஷாக் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்