Karthigai Deepam: சீரியஸ் கண்டிஷனில் தர்மலிங்கம்.. மாமனாரின் ஆசையை நிறைவேற்ற கார்த்திக் எடுத்த முடிவு-karthigai deepam serial episode on march 8 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: சீரியஸ் கண்டிஷனில் தர்மலிங்கம்.. மாமனாரின் ஆசையை நிறைவேற்ற கார்த்திக் எடுத்த முடிவு

Karthigai Deepam: சீரியஸ் கண்டிஷனில் தர்மலிங்கம்.. மாமனாரின் ஆசையை நிறைவேற்ற கார்த்திக் எடுத்த முடிவு

Aarthi Balaji HT Tamil
Mar 08, 2024 04:45 PM IST

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம்

அதாவது இது எல்லாம் நினைத்து பார்த்த தர்மலிங்கம் மிகுந்த மனவேதனையில் இருக்க மைதிலி அவருக்கு ஆறுதல் சொல்ல தீபாவின் அம்மா ஜோதி பக்கத்திலிருந்து பார்த்துக் கொள்கிறார்.

இன்னொரு பக்கம் ரக்சன் தீபாவுக்கு போன் செய்து பாட கூப்பிட்டு இருந்த நிலையில் இங்கே தர்மலிங்கத்திற்கு உடம்பு முடியாமல் போக அவரை ஹாஸ்பிடலுக்கு கொண்டு போய் சேர்க்க தீபாவின் அம்மா கார்த்திக்கு தகவல் கொடுக்கிறார்.

கார்த்திக் தீபாவிடம் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன் என்று சொல்லி ஹாஸ்பிடல் வந்து பார்க்க தர்மலிங்கம் சீரியஸ் கண்டிஷனில் இருப்பதாக டாக்டர்கள் சொல்கின்றனர்.

 படுக்கையில் கிடைக்கும் தர்மலிங்கம் கார்த்தியை கூப்பிட்டு என் பொண்ணு எப்படியாவது பாட வச்சிடுங்க மாப்பிள என்று கெஞ்ச இந்த விஷயம் தீபாவுக்கு தெரிய வேண்டாம் என்று கார்த்திக் தர்மலிங்கம் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி வீட்டிற்கு கிளம்பி வருகிறான்.

தனது வீட்டிற்கு வந்து எல்லோரிடமும் விஷயத்தை சொல்லி தீபாவுக்கு இந்த விஷயம் தெரியக்கூடாது என்று சொல்கிறான். ஐஸ்வர்யாவிடமும் அண்ணி உங்ககிட்ட ரெடக்வெஸ்ட்டா கேட்டுக்குறேன் இந்த முறையாவது எனக்கு சப்போர்ட் பண்ணுங்க என்று சொல்கிறான்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.