தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: தீபாவை தேடும் கார்த்திக்கை திசை திருப்பிய ரம்யா.. அடுத்து நடக்க போவது என்ன?

Karthigai Deepam: தீபாவை தேடும் கார்த்திக்கை திசை திருப்பிய ரம்யா.. அடுத்து நடக்க போவது என்ன?

Aarthi Balaji HT Tamil
Jul 05, 2024 02:48 PM IST

Karthigai Deepam: கார்த்திக் கோவிலுக்கு வந்து தேட அங்கு அவனது நண்பன் இளையராஜாவை பார்க்க அவன் என்ன மாப்ள கோவிலுக்கு வந்திருக்க என்று கேட்க தீபா காணாமல் போன விஷயத்தை சொல்கிறான். பிறகு மூவரும் சேர்ந்து தேட தொடங்குகின்றனர்.

தீபாவை தேடும் கார்த்திக்கை திசை திருப்பிய ரம்யா.. அடுத்து நடக்க போவது என்ன
தீபாவை தேடும் கார்த்திக்கை திசை திருப்பிய ரம்யா.. அடுத்து நடக்க போவது என்ன

Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய ( ஜூலை 5) எபிசோட் அப்டேட் பற்றி தெரிந்து கொள்வோம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய ( ஜூலை 4 ) எபிசோடில் கார்த்திக், மாணிக்கம் என இருவரும் தீபாவை தேடி கிளம்பிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

காணாமல் போன தீபா

அதாவது, கார்த்திக் கோவிலுக்கு வந்து தேட அங்கு அவனது நண்பன் இளையராஜாவை பார்க்க அவன் என்ன மாப்ள கோவிலுக்கு வந்திருக்க என்று கேட்க தீபா காணாமல் போன விஷயத்தை சொல்கிறான். பிறகு மூவரும் சேர்ந்து தேட தொடங்குகின்றனர்.

இதையடுத்து கார்த்திக் ரம்யாவுக்கு போன் செய்து தீபாவை பார்த்தீங்களா என்று விசாரிக்க அவள் இல்லை என்று பொய் சொல்கிறாள், மேலும் ரியா ஏன் தீபாவை கடத்தி இருக்க கூடாது, அந்த கோணத்தில் விசாரித்து பாருங்க என்று சொல்லி போனை வைக்கிறாள்.

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனந்திற்கு வந்த சந்தேகம்

உடனே ரம்யா, ஆனந்திற்கு போன் செய்து தீபாவை ரியா கடத்தி இருக்க வாய்ப்பிருக்கு, அவ வேற உங்களுக்கு போன் செய்து தீபாவை கடத்துவேனு சொல்லி இருக்கா என்று சொல்ல ஆனந்திற்கும் சந்தேகம் வருகிறது.

ஐஸ்வர்யா வீட்டிற்கு வந்து ராஜேஸ்வரி

அதன் பிறகு ரம்யா ஐஸ்வர்யா வீட்டிற்கு வந்து ராஜேஸ்வரியிடம் பேச்சு கொடுத்து அப்படியே ரூமிற்குள் உள்ளே( சென்று ரியாவை தேட அவள் பாத்ரூமுக்குள் ஒளிந்து கொள்கிறாள். பாத்ரூமில் ஒளிந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ரம்யா நெருங்கி செல்ல ரியா கரப்பான் பூச்சியை தூக்கி போட ரம்யா அதை பார்த்து பயந்து அங்கிருந்து நகர்ந்து வருகிறாள். 

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

நேற்றைய எபிசோட்

ரம்யா கோயிலுக்கு வர, அங்கு தீபா இல்லாததால், இவ எங்க போனா? இவளை போட்டு தள்ள பிளான் போட்டது நடக்குமா? நடக்காதா? என்று புலம்பினாள் மறுபக்கம், கார்த்திக் ஹாஸ்பிடலுக்கு வர, செகண்ட் ஒப்பீனியன் கேட்க போய் இருந்தியே என்ன ஆச்சு என்று கேட்க, எல்லாரும் இதையே தான் சொல்றாங்க என்று வருத்தப்பட்டான்.

அடுத்து ரியா, சுரேஷ் போனில் இருந்து போன் செய்து ஆனந்திடம் சமாதானம் பேச, ஆனந்த், நீ சரண்டர் ஆகி தான் ஆகணும் என்று சொல்ல,.ரியா நான் சரண்டர் ஆகிடுறேன். ஆனால் நீ என்னை கல்யாணம் பண்ணிக்கணும். நான் அந்த வீட்டு மருமகளாக வாழனும் என்று சொன்னாள்.

ஆனந்த் முடியாது என்று மறுக்க, கார்த்திக்கிடம் போனை கொடுக்க சொல்லி, என்னுடைய டீலுக்கு ஓகே சொல்லலைனா, உன் பொண்டாட்டியை தூக்கிடுவேன் என்று மிரட்டினாள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.