Karthigai Deepam Serial: நடு காட்டுக்குள் நடக்க போகும் பரிகாரம்.. மோசமடையும் அபிராமியின் உடல்நிலை
Karthigai Deepam Serial: அபிராமியின் உடல்நிலை மோசமாகி விட அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்க தொடங்குவதாக டாக்டர்கள் அதிர்ச்சி கொடுக்கின்றனர். இதனால் குடும்பத்தினர் எல்லோரும் கவலையடைகின்றனர்.

Karthigai Deepam Serial: கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய ( ஜூலை 2 ) எபிசோட் அப்டேட் பற்றி தெரிந்து கொள்ளவோம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலின் நேற்றைய (ஜூலை 1) எபிசோடில் ஐஸ்வர்யா சோப்பில் பீரோ சாவியை அச்சு வைத்து மறைத்து வைத்திருந்ததை அருண் பார்த்து விட்ட நிலையில் இன்று ( ஜூலை 2 ) நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மோசமான அபிராமியின் உடல்நிலை
அதாவது, அபிராமியின் உடல்நிலை மோசமாகி விட அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்க தொடங்குவதாக டாக்டர்கள் அதிர்ச்சி கொடுக்கின்றனர். இதனால் குடும்பத்தினர் எல்லோரும் கவலையடைகின்றனர்.
போலி சாமியார் பரிகாரம்
மறுபக்கம் தீபாவை தீர்த்து கட்ட ரம்யா ஏற்பாடு செய்திருந்த போலி சாமியார் பரிகாரம் செய்வதை பற்றி சொல்லி இந்த நிலையில் நடு காட்டுக்குள் ஓடும் ஆற்றில் இதற்கான பரிகாரத்தை செய்ய எல்லா ஏற்பாடுகளும் நடந்து உள்ளது.
பரிகாரம் செய்ய விரும்பும் தீபா
தீபா போலி சாமியார் சொன்னதையும் ரம்யாவின் நாடகத்தையும் உண்மை என நம்பி பரிகாரம் செய்ய வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
நேற்று நடந்தது என்ன?
அதாவது, கார்த்திக் போட்டோகிராபரை சந்திக்க சென்றபோது, ரியாவை பிடிக்க முயற்சி செய்தான். ஆனால், அது முடியாமல் போகிறது. மறுபக்கம் ரம்யா, தீபாவிடம் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டாம் என்று சொல்ல, தீபா, நீ என்ன பேசுற? அத்தைக்காக நான் கண்டிப்பா இதை செஞ்சு தான் ஆகணும் என்று சொல்கிறாள்.
உடனே ரம்யா, உனக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பதில் சொல்றது என்று கேட்க, தீபா போனை எடுத்து, இந்த பரிகாரத்தை நான் விருப்பப்பட்டு தான் செய்கிறேன். இதுல எனக்கு எந்த பிரச்சினையை ஏற்பட்டாலும், அதற்கு நான் மட்டுமே பொறுப்பு என்று சொல்கிறாள். இதனையடுத்து, ரம்யா நம்ம ரூட்டு கிளியர் என சந்தோஷப்படுகிறாள்.
அருணுக்கு வந்த சந்தேகம் !
அடுத்ததாக, ஐஸ்வர்யா ரூமில் இருக்க, அருண் அவளை எழுந்து சென்று முகத்தை கழுவி விட்டு வருமாறு சொல்ல, அவள் சென்றாள். ஐஸ்வர்யா சென்றதும், தலையணை கீழே அச்சு வைத்த சோப்பு இருப்பதை பார்த்த அருண் சந்தேகப்படுகிறான். இதனால் அங்கு பெரும் குழப்பம் நிலவியது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்