Karthigai Deepam: ரியாவுக்கு வேட்டு வைத்த கார்த்திக்.. கண் விழித்த அபிராமி, அடுத்து என்ன?
Karthigai Deepam: தீபாவோட கழுத்தை பாருங்க என்று கார்த்திக் சொல்ல அபிராமியும் பார்த்து விட்டு என்ன நீ மஞ்ச கயிற்றோட இருக்க.. உன்னுடைய தாலி எங்கே என்று கேட்க தீபா தாலியை கழட்டிய விஷயத்தை சொல்ல அபிராமி அவளை நினைத்து சந்தோசப்படுகிறாள்.

Karthigai Deepam: கார்த்திகை தீபம் இன்றைய (ஜூலை 17 ) எபிசோட் அப்டேட் பற்றி பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஒரு போன் காலை வைத்து ரம்யா கேம் விளையாடிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கண் விழித்த தீபா
அதாவது, அபிராமி அந்த விஷயத்தை கார்த்திக்கிடம் சொல்லி அழைத்து வர அபிராமி நான் உன்னை ரொம்ப கஸ்டப்படுத்திட்டேனா என்று கேட்க அவன் அப்படியெல்லாம் இல்லை என்று சொல்ல தீபா ஆமாம் அத்தை அவர் உங்கள நினைத்து ரொம்ப வருத்தப்பட்டார் என்று சொல்கிறாள்.
தாலி எங்கே
அதன் பிறகு தீபாவோட கழுத்தை பாருங்க என்று கார்த்திக் சொல்ல அபிராமியும் பார்த்து விட்டு என்ன நீ மஞ்ச கயிற்றோட இருக்க.. உன்னுடைய தாலி எங்கே என்று கேட்க தீபா தாலியை கழட்டிய விஷயத்தை சொல்ல அபிராமி அவளை நினைத்து சந்தோசப்படுகிறாள்.
பிறகு கார்த்தியிடம் நீ தீபா கழுத்தில் தாலி கட்டணும், அதை மனசார பார்க்கணும் என்று சொல்ல கார்த்திக் நீ சொன்னா பண்ணிட வேண்டியது தான் சொல்கிறான். பிறகு எல்லாரும் உள்ளே வந்து விடுகின்றனர். அபிராமி ஒவ்வொருத்தரையாக நலம் விசாரிக்க அவர்களும் அபிராமியை நலம் விசாரிக்கின்றனர். டாக்டர் டிஸ்ஜார்ஜ் செய்து அழைத்து செல்லலாம் என்று சொல்கிறார்.
ரியா தான் காரணம்
ஆனால் கார்த்திக் இதுக்கெல்லாம் காரணமாக ரியா கைது ஆகணும், அதன் பிறகு தான் அம்மாவை வீட்டிற்கு அழைத்து வரணும் என்று அருண் ஆனந்திடம் சொல்ல அப்போது ரியாவே ஆனந்துக்கு போன் செய்து பேச கார்த்திக் கோபப்படாம பேசி ஓரிடத்திற்கு வர வை என்று சொல்கிறான்.
ஆனந்தும் அதே போல் பேசி ரியாவை ஓரிடத்திற்கு வர வைத்து அவளை சந்திக்க அவள் ஆனந்திடம் நீ என்னை உன்னுடைய மனைவியா ஏத்துக்கிட்டா போதும் அதை தவிர நான் வேற எதையும் யோசிக்கல என்று சொல்கிறாள். ஆனந்த் அவளை கன்னத்தில் அறைந்து கோபப்படுகிறான்.
பிறகு போலீஸ் அங்கு வர ரியா கைதாக பின்னாடியே வரும் கார்த்தியை பார்த்த அவள் உன்ன சும்மா விட மாட்டேன் என்று கோபத்தோடு ஜெயிலுக்கு செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்