கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 4 எபிசோட்: சாந்தி முகூர்த்தத்திற்காக வந்த பாரம்பரிய கட்டில்.. கார்த்திகை தீபம் சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 4 எபிசோட்: சாந்தி முகூர்த்தத்திற்காக வந்த பாரம்பரிய கட்டில்.. கார்த்திகை தீபம் சீரியல்

கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 4 எபிசோட்: சாந்தி முகூர்த்தத்திற்காக வந்த பாரம்பரிய கட்டில்.. கார்த்திகை தீபம் சீரியல்

Malavica Natarajan HT Tamil
Published Apr 04, 2025 10:57 AM IST

கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 4 எபிசோட்: சாமுண்டீஸ்வரி சாந்தி முகூர்த்த்திற்கு நேரம் குறிக்க பரமேஸ்வரி பாட்டி, அவர்கள் குடும்பத்தின் பாரம்பரிய கட்டிலை கொடுத்து அனுப்புகிறாள்.

கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 4 எபிசோட்: சாந்தி முகூர்த்தத்திற்காக வந்த பாரம்பரிய கட்டில்.. கார்த்திகை தீபம் சீரியல்
கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 4 எபிசோட்: சாந்தி முகூர்த்தத்திற்காக வந்த பாரம்பரிய கட்டில்.. கார்த்திகை தீபம் சீரியல்

சாந்தி முகூர்த்தத்திற்கு நேரம் குறிக்கும் சாமுண்டீஸ்வரி

அதாவது, சாமுண்டீஸ்வரி ஜோதிடரை நான் தான் வர சொன்னேன் என்று சொல்ல ரேவதி அதிர்ச்சி அடைகிறாள். நான் என்ன மனநிலையில் இருக்கேன்.. இப்போ இதெல்லாம் தேவையா என கோபப்படுகிறாள்.

ஆனாலும் சாமுண்டீஸ்வரி ஜோதிடரை நேரம் குறிக்க சொல்லி விட்டு மயில் வாகனத்திடம் ஏற்பாடுகளை செய்ய சொல்கிறாள். மயில் வாகனம் பாட்டிக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல பாட்டி உடனடியாக தன்னை பார்க்க வர சொல்கிறாள்.

பாட்டி கொடுத்து அனுப்பிய கட்டில்

இங்கே மயில் வாகனம் பரமேஸ்வரி பாட்டி வீட்டுக்கு வர அவர் பரம்பரை கட்டிலை கொடுத்து இதில் தான் முதலிரவு நடக்கணும் என சொல்கிறார். மேலும் பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகளை சேர்த்து சுண்ட காய்ச்சிய பாலையும் கொடுத்து அனுப்புகிறார்.

மயில் வாகனம் கட்டிலுடன் வீட்டுக்கு வர சாமுண்டீஸ்வரி இதெல்லாம் எதுக்கு என கேட்க இது ரொம்ப பழமை வாய்ந்த கட்டில், இதில் வாழ்க்கையை தொடங்கினா அவங்க வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும் என சமாளிக்கிறான்.

உண்மை அறியும் கார்த்தி

மறுபக்கம் கார்த்திக் நர்ஸ்ஸை சந்திக்க நர்ஸ் கல்யாணம் நடந்து முடிந்து விட்டதா? உடம்பு சரியில்லாமல் போகவே என்னால் வர முடியவில்லை என சொல்கிறாள். கார்த்திக் தன்னுடன் கல்யாணம் நடந்து முடிந்த விஷயத்தை சொல்லி ஒரு உதவி கேட்கிறான்.

அடுத்ததாக கார்த்திக் டாக்டரை சந்தித்து மகேஷ் குறித்து விசாரிக்க ஆமாம் அவனுக்கும் மாயாவுக்கும் தொடர்பு இருந்தது உண்மை தான் என சொல்கிறார். சாமுண்டீஸ்வரி தான் இதை வெளியில் சொல்ல வேண்டாம் என கூறியதாகவும் சொல்கிறார்.

கார்த்தி செயலை அறிந்த சாமுண்டீஸ்வரி

இதை கேட்டு கார்த்திக் அங்கிருந்து கிளம்பியதும் டாக்டர் மல்லிகா சாமுண்டீஸ்வரிக்கு போன் செய்து கார்த்திக் வந்து சென்ற விஷயத்தை சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.