கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 6 எபிசோட்: சந்திர கலாவை ஏமாற்றிய ரேவதி.. அவமானப்படுத்தும் சாமுண்டீஸ்வரி..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 6 எபிசோட்: சந்திர கலாவை ஏமாற்றிய ரேவதி.. அவமானப்படுத்தும் சாமுண்டீஸ்வரி..

கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 6 எபிசோட்: சந்திர கலாவை ஏமாற்றிய ரேவதி.. அவமானப்படுத்தும் சாமுண்டீஸ்வரி..

Malavica Natarajan HT Tamil
Published Jun 06, 2025 03:28 PM IST

கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 6 எபிசோட்: ரேவதி ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முடியாமல் வீடு திரும்பியதால் சந்திர கலா ரேவதி மீது கோவத்தில் உள்ளார்.

கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 6 எபிசோட்: சந்திர கலாவை ஏமாற்றிய ரேவதி.. அவமானப்படுத்தும் சாமுண்டீஸ்வரி..
கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 6 எபிசோட்: சந்திர கலாவை ஏமாற்றிய ரேவதி.. அவமானப்படுத்தும் சாமுண்டீஸ்வரி..

சந்திர கலாவை ஏமாற்றிய ரேவதி

அதாவது ஹாஸ்பிடலில் இருந்து போன் கால் வர கார்த்திக் வந்து செல்ல ரேவதி கையில் அடிபட்டு ஹாஸ்பிடலில் இருப்பது தெரிய வருகிறது. கையில் காயம் ஏற்பட்ட காரணத்தினால் விமானத்தில் செல்ல முடியாது என்பதால் அவள் வெளிநாடு போக முடியவில்லை என்பது தெரிய வருகிறது. இதைத்தொடர்ந்து கார்த்திக் ரேவதியுடன் வீட்டுக்கு வர அவன் ஆஸ்திரேலியா போக முடியாத விஷயத்தை சொல்ல சந்திரகலா கடுப்பாகிறாள்.

அவமானப்படுத்தும் சாமுண்டீஸ்வரி

இதைத்தொடர்ந்து பரமேஸ்வரி பாட்டி கும்பாபிஷேக பத்திரிக்கையுடன் வீட்டுக்கு வர சாமுண்டீஸ்வரி அவமானப்படுத்துகிறாள். ஆனாலும் முறையாக செய்ய வேண்டும் என்று சொல்லி பரமேஸ்வரி பாட்டி பத்திரிக்கையை கொடுத்து விட்டு கிளம்பி செல்கிறார். அதன் பிறகு எல்லோரும் சாப்பிட உட்கார்ந்து ரேவதிக்கு கையில் அடிபட்ட காரணத்தினால் கார்த்தியை ஊட்டி விட சொல்ல முதலில் தயங்கிய கார்த்தி பிறகு வேறு வழியில்லாமல் ஊட்டி விடுகிறான்.

சுவாதியை சுற்றிய சதி

பிறகு காலேஜில் ஸ்வாதியை சந்தித்த சிலர் உங்க குரல் ரொம்ப நல்லா இருக்கு மியூசிக் டைரக்டர் ஒருத்தர் உங்களுக்கு வாய்ப்பு தரதா சொல்லி இருக்காரு என்று சொல்ல சுவாதி இப்போ இருக்க சூழ்நிலையில் அது எதுவும் சரியா வராது என மறுத்து விடுகிறாள். அதன் பிறகு அந்த நபர்கள் சிவனாண்டியை சந்தித்து பேச இதெல்லாம் அவனுடைய திட்டம் என்பது தெரிய வருகிறது.

கார்த்திக்கை பற்றிய ரேவதி

தொடர்ந்து கார்த்திக் மற்றும் ரேவதி ஹாஸ்பிடலுக்கு செல்ல ரேவதி ஊசிக்கு பயந்து கார்த்தியின் கையைப் பிடித்துக் கொள்கிறாள். மாயா மகேஷ் இவர்களை கேட்டு இவர்களை சந்திக்க வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.