கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 5 எபிசோட்: ரேவதிக்கு வரும் அட்வைஸ்.. துளிர்விடும் காதல்.. கார்த்திகை தீபம் சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 5 எபிசோட்: ரேவதிக்கு வரும் அட்வைஸ்.. துளிர்விடும் காதல்.. கார்த்திகை தீபம் சீரியல்

கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 5 எபிசோட்: ரேவதிக்கு வரும் அட்வைஸ்.. துளிர்விடும் காதல்.. கார்த்திகை தீபம் சீரியல்

Malavica Natarajan HT Tamil
Published Jun 05, 2025 03:20 PM IST

கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 5 எபிசோட்: ரேவதி கார்த்தியை பிரிந்து செல்ல நினைத்த நிலையில், பலரும் அவளுக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.

கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 5 எபிசோட்: ரேவதிக்கு வரும் அட்வைஸ்.. துளிர்விடும் காதல்.. கார்த்திகை தீபம் சீரியல்
கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 5 எபிசோட்: ரேவதிக்கு வரும் அட்வைஸ்.. துளிர்விடும் காதல்.. கார்த்திகை தீபம் சீரியல்

ரேவதிக்கு அட்வைஸ்

அதாவது ரேவதி கார்த்திக்காக ஒரு கிப்ட் வாங்கி கொடுக்கிறாள். அதன் பிறகு இருவரும் காரில் வந்து கொண்டிருக்க திடீரென கார் ரிப்பேர் ஆகிவிடுகிறது. இதனைத் தொடர்ந்து ஒரு ஆட்டோவில் ஏர்போர்ட் வருகின்றனர்.

ஏர்போர்ட்டில் ரேவதி தன்னுடைய தோழியை சந்திக்க அப்போது அவள் நான் என் அனுபவத்துல சொல்றேன், வெளிநாடு எல்லாம் போகாத, உன்னோட குடும்பத்தை ரொம்ப மிஸ் பண்ணுவ, ஏன் இங்க வந்து வருத்தப்படுவ என்று அறிவுரை வழங்குகிறாள்.

கார்த்தியை கட்டிப்பிடித்த ரேவதி

இதைத்தொடர்ந்து பரமேஸ்வரி பாட்டி ரேவதிக்கு போன் செய்து உன்கிட்ட பேசி ரொம்ப நாளாச்சு என்பதால் ஃபோன் செய்ததாக சொல்லி பேசுகிறாள். அடுத்து கார்த்திக் மற்றும் ரேவதி லிப்ட் செல்லும்போது திடீரென கரண்ட் கட் ஆகி லிப்ட் பாதியில் நிற்க ரேவதி பயத்தில் கார்த்தியை லைட்டாக கட்டிப்பிடித்துக் கொள்கிறாள்.

கார்த்திக் பயப்படாதீங்க என்று சொல்லி ரேவதியை கூல் செய்கிறான். இங்கே மயில்வாகனம் ரோகிணியிடம் ரேவதி ஆஸ்திரேலியா செல்லும் விஷயத்தை சொல்ல அவள் ரேவதிக்கு போன் செய்து அட்வைஸ் கொடுக்கிறாள்.

குழப்பத்தில் ரேவதி

இதன் பிறகு ரேவதி நீ நல்லவன் தான் அது எனக்கு தெரியும், எனக்கு என்ன முடிவு எடுக்கிறதுன்னு தெரியல என்று சொல்ல கார்த்திக் உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை செய்யுங்க என்று சொல்லி ரேவதி ஏர்போர்ட்டில் ட்ராப் செய்துவிட்டு வீட்டிற்கு கிளம்பி வருகிறான்.

இன்னொரு பக்கம் அபிராமி பழனிக்கு பாதயாத்திரை வந்து கார்த்திக் ரேவதி ஒன்னு ஒற்றுமையா இருக்கணும் என்று பூஜை செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சந்திரகலா மூலம் வந்த அச்சுறுத்தல்

ரேவதி கார்த்தியுடன் ஏர்போர்ட்டுக்கு வரும் சமயத்தில் சந்திரகலா போன் செய்து நீ ஆஸ்திரேலியா போறது எனக்கு தெரியும் இப்போ இருக்க சூழ்நிலையில் இதுதான் சரியான முடிவு என்று சொல்லி ஃபோனை வைக்கிறாள். இதைக் கேட்ட ரேவதி கார்த்தியிடம் காரை நிறுத்த சொல்கிறாள்.