கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 4 எபிசோட்: ஆஸ்திரேலியா கிளம்பிய ரேவதிக்கு காத்திருந்த ட்விஸ்ட்.. கார்த்திகை தீபம் சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 4 எபிசோட்: ஆஸ்திரேலியா கிளம்பிய ரேவதிக்கு காத்திருந்த ட்விஸ்ட்.. கார்த்திகை தீபம் சீரியல்

கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 4 எபிசோட்: ஆஸ்திரேலியா கிளம்பிய ரேவதிக்கு காத்திருந்த ட்விஸ்ட்.. கார்த்திகை தீபம் சீரியல்

Malavica Natarajan HT Tamil
Published Jun 04, 2025 03:20 PM IST

கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 4 எபிசோட்: ரேவதி வீட்டில் இருக்கும் யாருக்கும் தெரியாமல் ஆஸ்திரேலியா கிளம்பிய நிலையில், அவளுக்கு வந்த போனால் ஒருவித பயம் ஏற்படுகிறது.

கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 4 எபிசோட்: ஆஸ்திரேலியா கிளம்பிய ரேவதிக்கு காத்திருந்த ட்விஸ்ட்.. கார்த்திகை தீபம் சீரியல்
கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 4 எபிசோட்: ஆஸ்திரேலியா கிளம்பிய ரேவதிக்கு காத்திருந்த ட்விஸ்ட்.. கார்த்திகை தீபம் சீரியல்

தோல்வியில் முடிந்த சந்திரகலா திட்டம்

அதாவது மண்டபத்தில் வைத்து கலச பூஜை நடந்து முடிகிறது. இதைத்தொடர்ந்து சந்திர கலா மற்றும் சாமுண்டீஸ்வரி மண்டபத்திற்கு வர சந்திரகலா திட்டம் தோல்வியடைந்ததை நினைத்து வருத்தம் அடைகிறாள்.

அதன் பிறகு கார்த்திக்கை எப்படியாவது சிக்க வைக்க வேண்டும் என யோசிக்கின்றனர். பிறகு ரேவதியின் பிளைட் டிக்கெட் கீழே விழ சந்திரகலா சாமுண்டீஸ்வரி அதை பார்க்க போகும் சமயத்தில் மயில்வாகனம் அந்த டிக்கெட்டை எடுத்து ரேவதியை காப்பாற்றுகிறான்.

ரேவதியை காப்பாற்றும் கார்த்தி

பிறகு கார்த்தியிடம் ரேவதி ஆஸ்திரேலியா செல்கிறாளா என விசாரிக்கின்றான். அதற்கு கார்த்தி ஆமாம் என்று சொல்ல மயில்வாகனம் ரேவதியிடம் நீ செய்வது சரியில்ல என்று அறிவுரை வழங்குகிறான். அடுத்த நாள் கார்த்திக் ரேவதி வெளியே கிளம்ப சாமுண்டீஸ்வரி உங்களுடன் நானும் வருவதாக சொல்கிறாள். அப்போது கார்த்திக் நானே கூட்டிட்டு போய் கூட்டிட்டு வரேன், பெங்களூருக்கு ஒரு கல்யாணத்துக்கு போறாங்க என்று பொய் சொல்லி ரேவதியை அழைத்துக்கொண்டு கிளம்புகிறான்.

சந்திர கலா மூலம் வந்த அச்சுறுத்தல்

ரேவதி கார்த்தியுடன் ஏர்போர்ட்டுக்கு வரும் சமயத்தில் சந்திரகலா போன் செய்து நீ ஆஸ்திரேலியா போறது எனக்கு தெரியும் இப்போ இருக்க சூழ்நிலையில் இதுதான் சரியான முடிவு என்று சொல்லி ஃபோனை வைக்கிறாள். இதைக் கேட்ட ரேவதி கார்த்தியிடம் காரை நிறுத்த சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மண்டபத்திற்கு வந்த பாட்டி

முன்னதாக, சிவனாண்டி விருமனுக்கு போன் போட்டு கார்த்திக் கலச பூஜைக்கு வந்தால் தகவல் கொடுக்க சொல்லி சொல்கிறான். இதை தொடர்ந்து இங்கே மண்டபத்தில் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்துடன் இருக்க பரமேஸ்வரி பாட்டி கலசத்துடன் மண்டபத்திற்கு கிளம்பி வருகிறாள்.

மயிலின் திட்டம்

இந்த விஷயம் கார்த்திக்கு தெரிய வர பாட்டி வரும் சமயத்தில் சந்திரகலா இங்கு இருக்கக் கூடாது என திட்டமிட்டு வாழைப்பழம் தோலை கீழே போட்டு அவளை வழுக்கி விழ வைக்கின்றனர். பிறகு மயில்வாகனம் சந்திர கலாவை ஹாஸ்பிடல் அழைத்துச் சென்று எக்ஸ் - ரே, ஸ்கேனிங் என எல்லாவற்றையும் எடுக்க வைத்து நேரத்தை தாமதப்படுத்துகிறான்.