கடத்தப்படும் அபிராமி.. கோயில் நகையை ஆட்டைய போடும் வில்லன்கள் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கடத்தப்படும் அபிராமி.. கோயில் நகையை ஆட்டைய போடும் வில்லன்கள் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

கடத்தப்படும் அபிராமி.. கோயில் நகையை ஆட்டைய போடும் வில்லன்கள் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jun 25, 2025 03:10 PM IST

கடத்தப்படும் அபிராமி, கோயில் நகையை ஆட்டையை போடும் வில்லன்கள் என பரபரப்பான காட்சிகளுடன் கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அமைந்துள்ளது. இன்றைய எபிசோடில் நடக்க இருப்பது என்ன என்பதை பார்க்கலாம்

கடத்தப்படும் அபிராமி.. கோயில் நகையை ஆட்டைய போடும் வில்லன்கள் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கடத்தப்படும் அபிராமி.. கோயில் நகையை ஆட்டைய போடும் வில்லன்கள் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

கோயில் நகைகள் திருட்டு

அதாவது சிவணாண்டியின் ஆட்கள் அபிராமி இருக்கும் வீட்டை கண்டுபுடித்து பரமேஸ்வரி பாட்டி குரலில் பேசி அவளை வெளியே வர வைத்து கடத்துகின்றனர். இன்னொரு பக்கம் முத்துவேல் மற்றும் இன்ஸ்பெக்டர் துரை ஆகியோர் கூட்டு சேர்ந்து பரமேஸ்வரி பாட்டியின் வீட்டுக்குள் புகுந்து யாருக்கும் தெரியாமல் கோயில் நகைகளை திருடுகின்றனர்.

அடுத்த நாள் காலையில் கோயிலில் எல்லாரும் காத்த கொண்டிருக்க இங்கே நகை காணாமல் போனது தெரியாமல் கோவிலுக்கு கிளம்ப தயாராகுகிறாள். பிறகு அமைச்சர் சிறப்பு விருந்தினராக கோயிலுக்கு வர சாமுண்டீஸ்வரியும் அவரும் தங்களை அறிமுகம் செய்து கொள்கின்றனர்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோட்

ஜானகி மற்றும் மைதிலி கோயிலில் இருந்து கிளம்புவதாக சொல்ல ரேவதி, இருங்க என்னுடைய கணவரை டிராப் செய்ய சொல்லுறேன் என்று சொல்கிறாள். ஆனால், ஜானகி வேண்டாம் மா நாங்க ஆட்டோவில் போறோம் என்று சொல்லி கிளம்புகிறார்கள். கூட்டத்தில் கார்த்திகை போல ஒருவரை பார்த்ததை நினைத்துக்கொண்டே இருக்கிறாள் மைதிலி.

அப்போது, ஜானகி, என்ன மைதிலி ஏதோ யோசனையில் இருக்க என்று கேட்க, கோயிலில் கார்த்திக் மாதிரி ஒருத்தரை பார்த்தேன், கிட்ட போய் பார்க்க போவதற்குள் அவர் கிளம்பிவிட்டார் என்று சொல்கிறாள். அப்போது, ஜானகி கார்த்திக் ஏன் இங்கே வர போகிறார். இது வேறு யாராவது இருக்கும் என்கிறார்.

மறுபக்கம் கார்த்திக், அபிராமிக்கு போன் செய்து, உடனடியாக வீட்டிலிருந்து வேறு ஒரு வாடகை வீட்டுக்கு சென்று விடுங்கள் என்று சொல்கிறாள். இதை கேட்ட அபிராமி நம்மிடமே ஏழு, எட்டு வீடு இருக்கும்போது நான் ஏன் வாடகை வீட்டுக்கு செல்ல வேண்டும் என கேட்கிறாள்.

அப்போது கார்த்தி, கும்பாபிஷேகத்தை கெடுக்க அவர்கள் போட்ட பிளானை நான் கெடுத்துவிட்டேன். இதனால், எப்படியாவது வேறு ஒரு திட்டத்தை போடுவார்கள். இதனால் தான் பாதுகாப்புக்காக வேறு வீட்டுக்கு போக சொன்னேன் என்கிறான். உடனே அபிராமியும் வேறு வீட்டுக்கு சென்றுவிடுகிறாள்.

கும்பாபிஷேகத்தை கெடுக்க பிளான் போட்டதால், கார்த்திக் மீது ஆத்திரத்தில் இருக்கும் சந்திரகலா, சிவனாண்டி ஆகியோர் அபிராமியை கடத்த அவளது வீட்டுக்கு ஆட்களை அனுப்புகின்றனர். அந்த வீட்டின் சுவரை ஏறி குதித்து ரவுடிகள் உள்ளே சென்று பார்த்தால், அங்கே யாருமே இல்லாததை பார்த்து விட்டு, சந்திரகலாவுக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொல்கின்றனர்.

அப்போது, சிவனான்டி, கார்த்திச் சரியான திறமையானவனா இருக்கிறான். நாம அடுத்து என்ன பிளான் போடுவோம் என்பதை தெரிஞ்சுக்கிட்டு, சரியாக காய்களை நகர்த்திட்டு வருகிறான். அவன நாம சாதாரண ஆளாகவே நினைக்க கூடாது என்கிறான். உடனே சந்திரகலா, அவன் மூளைக்காரனாக இருந்தாலும் அதைவிட நான் மூளைக்காரி என்பதை நான் நிரூபித்து காட்டுகிறேன் என்று வேறு ஒரு திட்டத்தை சொல்வதுடன் நிறைவடைந்தது.