கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 23 எபிசோட்: விழுந்து நொறுங்கிய முளைப்பாரி.. ரேவதி காதல் கார்த்திக் செய்த விஷயம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 23 எபிசோட்: விழுந்து நொறுங்கிய முளைப்பாரி.. ரேவதி காதல் கார்த்திக் செய்த விஷயம்

கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 23 எபிசோட்: விழுந்து நொறுங்கிய முளைப்பாரி.. ரேவதி காதல் கார்த்திக் செய்த விஷயம்

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 23, 2025 02:35 PM IST

கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 23 எபிசோட்: கார்த்திக், ஜானகி மைதிலி ஆகியோர் பார்த்து விடுவார்க்ளா என்ற பில்டப் காட்சிகள் எகிற கடைசியில் முளைப்பாரி எடுப்பதற்கு நேரம் ஆவதால் கோயிலுக்கு சென்று விடுகின்றனர்.

கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 23 எபிசோட்: விழுந்து நொறுங்கிய முளைப்பாரி.. ரேவதி காதல் கார்த்திக் செய்த விஷயம்
கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 23 எபிசோட்: விழுந்து நொறுங்கிய முளைப்பாரி.. ரேவதி காதல் கார்த்திக் செய்த விஷயம்

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் வெள்ளிக்கிழமை எபிசோடில் கோயில் திருவிழாவில் அன்னதானத்தில் விஷம் வைத்த வில்லன்களின் சதியை கார்த்திக் முறியடித்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, ரேவதி ஓரிடத்தில் உட்கார்ந்து சிலை ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது மைதிலி மற்றும் ஜானகி ஆகியோர் கோயிலுக்கு வருகின்றனர். அவர்களை வரவேற்கும் ரேவதி வாங்க என் கணவரை அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று கார்த்தியை காட்ட அழைத்துச் செல்கிறாள்.

கார்த்திக், ஜானகி மைதிலி ஆகியோர் பார்த்து விடுவார்க்ளா என்ற பில்டப் காட்சிகள் எகிற கடைசியில் முளைப்பாரி எடுப்பதற்கு நேரம் ஆவதால் கோயிலுக்கு சென்று விடுகின்றனர்.

கீழே விழுந்த முளைப்பாரி

பிறகு முளைப்பாரி எடுப்பதற்காக எல்லோரும் தயாராக ரேவதியின் முளைப்பாரி கீழே விழுந்து உடைய ரேவதி வருத்தமும் கோபமும் அடைகிறாள்.

இதனை தொடர்ந்து கார்த்திக் ரேவதிக்காக என்ன செய்வது என்று யோசிக்க, கடைசியில் ஒருவர் முளைப்பாரி எடுக்க வரவில்லை என்பதை அறிந்த கார்த்திக் அதனை வாங்கி ரேவதிக்கு கொடுக்கிறான்.

அதன் பிறகு ரேவதி நடந்த விஷயங்களை ஜானகியிடம் சொல்ல அவள் இதையெல்லாம் கேட்கும் போது என் மருமகன் ஞாபகம் தான் எனக்கு வருது என்று சொல்கிறாள். கோயில் திருவிழாவில் கார்த்திக் ஒரு பக்கம் நின்று கொண்டிருக்க மைதிலி இதை பார்த்து விடுகிறாள். ஆனால் கார்த்தியிடம் பேச முடியாமல் போக இதை ஜானகியிடம் சொல்கிறாள்.

நடக்காமல் போன சந்திப்பு

அடுத்து இருவரும் வீட்டுக்கு கிளம்ப ரேவதி கார்த்தியை ட்ராப் செய்ய சொல்வதாக அவர்கள் ஆட்டோவில் செல்வதாக சொல்லிக் கொண்டு செல்கின்றனர். இதனால் வாய்ப்பு அமைந்தும் கார்த்திக் ஜானகி மைதிலி ஆகியோரின் சந்திப்பு நடக்காமல் போகிறது.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.