கார்த்திகை தீபம் சீரியல் மார்ச் 21 எபிசோட்: முடிவெடுத்த சாமுண்டீஸ்வரி.. அதிர்ச்சியில் ராஜராஜன்.. கார்த்திகைதீபம் சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கார்த்திகை தீபம் சீரியல் மார்ச் 21 எபிசோட்: முடிவெடுத்த சாமுண்டீஸ்வரி.. அதிர்ச்சியில் ராஜராஜன்.. கார்த்திகைதீபம் சீரியல்

கார்த்திகை தீபம் சீரியல் மார்ச் 21 எபிசோட்: முடிவெடுத்த சாமுண்டீஸ்வரி.. அதிர்ச்சியில் ராஜராஜன்.. கார்த்திகைதீபம் சீரியல்

Malavica Natarajan HT Tamil
Published Mar 21, 2025 11:50 AM IST

கார்த்திகை தீபம் சீரியல் மார்ச் 21 எபிசோட்: மகேஷின் உண்மை முகம் தனக்கு தெரியும் என்றும் என் மகளுக்கு அவன் மாப்பிள்ளை ஆக முடியாது என்றும் தான் முடிவெடுத்துவிட்டதாக சாமுண்டீஸ்வரி ராஜராஜனிடம் கூறினாள்.

கார்த்திகை தீபம் சீரியல் மார்ச் 21 எபிசோட்: முடிவெடுத்த சாமுண்டீஸ்வரி.. அதிர்ச்சியில் ராஜராஜன்.. கார்த்திகை தீபம் சீரியல
கார்த்திகை தீபம் சீரியல் மார்ச் 21 எபிசோட்: முடிவெடுத்த சாமுண்டீஸ்வரி.. அதிர்ச்சியில் ராஜராஜன்.. கார்த்திகை தீபம் சீரியல

முடிவெடுத்த சாமுண்டீஸ்வரி

அதாவது ராஜேஸ்வரி என்ன சொல்ற.. அந்த கேடு கெட்டவனையா உன் பொண்ணுக்கு கட்டி வைக்க போற என்று கேட்க சாமுண்டீஸ்வரி இல்ல ட்ரைவர் ராஜா தான் என் பொண்ணு கழுத்தில் தாலி கட்ட போறான் என்று சொல்கிறாள்.

ஏமாற்றத்துடன் திரும்பும் பரமேஸ்வரி பாட்டி

இதனை தொடர்ந்து மறுபக்கம் பரமேஸ்வரி நான் போய் சாமுண்டீஸ்வரியிடம் பேசுறேன், அவளை சம்மதிக்க வைக்கிறேன் என்று கிளம்பி வருகிறாள். பாட்டி ரேவதிக்கு என் பேரனை கட்டி வைக்க சம்மதம் சொல்லு என்று பேச சாமுண்டீஸ்வரி கண்டு கொள்ளாமல் இருக்கிறாள். மேலும் நீங்க நினைக்கிறது ஒரு காலமும் நடக்காது என்று சொல்லி கிளம்பி செல்கிறாள், பரமேஸ்வரி பாட்டியும் ஏமாற்றத்துடன் திரும்புகிறாள்.

ராஜராஜனிடம் உண்மையை சொன்ன சாமுண்டீஸ்வரி

அதனை தொடர்ந்து ராஜராஜன் சாமுண்டீஸ்வரியிடம் வந்து அவனையா நம்ப பொண்ணுக்கு கட்டி வைக்க போற? அவன் நல்லவன் இல்ல என்று சொல்ல சாமுண்டீஸ்வரி அவன் கேடு கெட்டவன் என்பது எனக்கும் தெரியம் என்று சொல்கிறாள்.

அப்படி தெரிந்தே நம்ம பொண்ணு வாழ்க்கையை நான் கெடுப்பேனா? கண்டிப்பா அவன் கூட இந்த கல்யாணம் நடக்காது. ட்ரைவர் ராஜாவை தான் நம்ப வீட்டு மாப்பிள்ளையாக்க போறேன் என்று சொல்ல ராஜராஜன் நாம நினைத்த மாதிரியே எல்லாம் நடக்குது என சந்தோசப்படுகிறான்.

காணாமல் போன மகேஷ்

பின் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், இது நல்ல முடிவு தான். டிரைவருக்கும் நம்ம குடும்பத்து மேல நல்ல அபிப்பிராயம் இருக்கு. அவன் ரொம்ப நல்லவன். நம்ம ரேவதியையும் நல்லா வச்சு பாத்துப்பான் என எதுவும் தெரியாதது போல் சொல்கிறார்.

இதற்குள் மணமேடையில், ரேவதி காத்திருக்க மாப்பிள்ளை மகேஷை அழைத்து வர மாயா வருகிறாள். ஆனால், அங்கு மகேஷ் இல்லாததால் பதற்றம் அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், 2017ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். காட்சி (விஷூவல்), டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பெரியார் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற இவர், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சினிமா, புகைப்படத்தொகுப்பு சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.