கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 17 எபிசோட்: கும்பாபிஷேகத்திற்கு நடக்கும் ஏற்பாடுகள்.. பரமேஸ்வரியை அவமானப்படுத்திய ஈஸ்வரி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 17 எபிசோட்: கும்பாபிஷேகத்திற்கு நடக்கும் ஏற்பாடுகள்.. பரமேஸ்வரியை அவமானப்படுத்திய ஈஸ்வரி

கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 17 எபிசோட்: கும்பாபிஷேகத்திற்கு நடக்கும் ஏற்பாடுகள்.. பரமேஸ்வரியை அவமானப்படுத்திய ஈஸ்வரி

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 17, 2025 11:42 AM IST

கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 17 எபிசோட்: தீபாவுக்கு நினைவு நாள் என்பதால் ஜானகி பூஜைக்கான ஏற்பாடுகள் செய்ய ரேவதி இவர்கள் வீட்டிற்கு வருகிறாள்.

கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 17 எபிசோட்: கும்பாபிஷேகத்திற்கு நடக்கும் ஏற்பாடுகள்.. பரமேஸ்வரியை அவமானப்படுத்திய ஈஸ்வரி
கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 17 எபிசோட்: கும்பாபிஷேகத்திற்கு நடக்கும் ஏற்பாடுகள்.. பரமேஸ்வரியை அவமானப்படுத்திய ஈஸ்வரி

கார்த்திகை தீபம் சீரியலில் இன்று

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் நவீன் துர்கா திருமணம் செய்து கொள்ள, கார்த்திக் அதை வீட்டில் சொல்லாமல் மறைத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, தீபாவுக்கு நினைவு நாள் என்பதால் ஜானகி பூஜைக்கான ஏற்பாடுகள் செய்ய ரேவதி இவர்கள் வீட்டிற்கு வருகிறாள். நீங்க சொன்னதை ஃபாலோ பண்ணேன்; கை வலி குறைந்து விட்டது என ரேவதி நன்றி சொல்கிறாள்.

கும்பாபிஷேகத்திற்கான வேலைகள்

இதனை தொடர்ந்து இன்னொரு பக்கம் பரமேஸ்வரி பாட்டி கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கவனிக்க, முளைப்பயிர் எடுக்க வேண்டும் என்று பேசுகின்றனர்; பரமேஸ்வரி பாட்டி சாமுண்டீஸ்வரியின் 4 பெண்களின் பெயர்களையும் எழுத சொல்கிறார்.

அடுத்து பரமேஸ்வரி பாட்டி கும்பாபிஷேகத்திற்காக புது துணி எடுத்து கொண்டு சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வருகிறார். கும்பாபிஷேகம் குறித்து பேச சாமுண்டீஸ்வரி எதாவது காரணத்தை சொல்லிட்டு இந்த வீட்டிற்கு வந்துட்டியே இருப்பீர்களா என்று கோபப்படுகிறாள்.

மேலும் சாமுண்டீஸ்வரி பரமேஸ்வரி பாட்டியை அவமானப்படுத்தி அனுப்புகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.