கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 16 எபிசோட்: குட்டையை குழப்பும் மாயா.. ரேவதி கொடுத்த பதில்.. குளிர்ந்து போன சாமுண்டீஸ்வரி
கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 16 எபிசோட்: ரேவதி மாயா வீட்டுக்கு வந்து அவளை சந்திக்க மகேஷ் எங்க போனான் என்று தெரியல, அவன் இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு, எப்படி ஆச்சு அவனை தேடி கண்டுபிடித்து கொடு என்று சொல்ல ரேவதி ஹனிமூனுக்கு போகும் போது, கார்த்தியிடம் பேசி உண்மையை கண்டு பிடிக்கிறேன் என்று சொல்கிறாள்.

கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 16 எபிசோட்: மகேஷூடன் சேர்ந்து வாழ சம்மதமா? மாயா கேட்ட கேள்வி, ரேவதியின் பதில் என்ன? - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மாயா ரேவதிக்கு போன் செய்து உன்னை சந்திக்க வேண்டும் என்று சொல்லிய நிலையில் என்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மாயாவுடன் நடந்த சந்திப்பு
அதாவது, ரேவதி இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் மாயாவை சந்திக்க கிளம்ப சாமுண்டீஸ்வரி இதை பார்த்து இந்த நேரத்துல எங்க போற என ரேவதியை பின் தொடர்ந்து செல்கிறாள்.
ரேவதி மாயா வீட்டுக்கு வந்து அவளை சந்திக்க மகேஷ் எங்க போனான் என்று தெரியல, அவன் இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு, எப்படி ஆச்சு அவனை தேடி கண்டுபிடித்து கொடு என்று சொல்ல ரேவதி ஹனிமூனுக்கு போகும் போது, கார்த்தியிடம் பேசி உண்மையை கண்டு பிடிக்கிறேன் என்று சொல்கிறாள்.
பிறகு மாயா மகேஷ் திரும்ப வந்தால் அவனை ஏத்துக்குவியா என்று கேட்க, ரேவதி கார்த்தியை பிடிக்காட்டினாலும் அவ என் கழுத்துல தாலி கட்டிட்டான். அவன் தான் என்னுடைய புருஷன். ஒரு பொண்ணோட கழுத்துல ஒரு முறை தான் தாலி ஏறணும் என்று சொல்லி விடுகிறாள்.
ரேவதி பேசுவதை கேட்ட சாமுண்டீஸ்வரி ஓரளவிற்கு மன நிம்மதி அடைகிறாள். அடுத்த நாள் காலையில் கார்த்திக் ரேவதி ஆகியோருடன் ஹரியும் கிளம்ப தயாராகின்றனர். இன்னொரு பக்கம் ரேவதி டல்லாகவே இருக்க, ராஜராஜன் கார்த்தியிடம் பணக்கட்டை எடுத்து செலவுக்கு வச்சுக்கோங்க மாப்ள என்று கொடுக்கிறார்.
அதைத்தொடர்ந்து கார்த்திக் மற்றும் ரேவதி என இருவரும் ஏற்காட்டுக்கு வந்து இறங்குகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைகாட்சியில் காணத்தவறாதீர்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்