கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 14 எபிசோட்: கோபத்தில் கொந்தளிக்கும் ரேவதி.. காரணம் சொல்லி அடக்கிய சாமுண்டீஸ்வரி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 14 எபிசோட்: கோபத்தில் கொந்தளிக்கும் ரேவதி.. காரணம் சொல்லி அடக்கிய சாமுண்டீஸ்வரி!

கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 14 எபிசோட்: கோபத்தில் கொந்தளிக்கும் ரேவதி.. காரணம் சொல்லி அடக்கிய சாமுண்டீஸ்வரி!

Kalyani Pandiyan S HT Tamil
Published Apr 14, 2025 01:27 PM IST

கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 14 எபிசோட்: இருவரையும் ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் வரவேற்ற பரமேஸ்வரி பாட்டி, உட்கார வைத்து விருந்து வைக்கிறார். ரேவதி சாப்பிட்டு முடித்துவிட்டு கை கழுவ சென்ற சமயத்தில், பாட்டி கார்த்தியிடம் எப்படியாவது நீங்க சேர்ந்து வாழணும் என்று சொல்கிறாள்.

கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 14 எபிசோட்: கோபத்தில் கொந்தளிக்கும் ரேவதி.. காரணம் சொல்லி அடக்கிய சாமுண்டீஸ்வரி!
கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 14 எபிசோட்: கோபத்தில் கொந்தளிக்கும் ரேவதி.. காரணம் சொல்லி அடக்கிய சாமுண்டீஸ்வரி!

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில், கார்த்திக் ரேவதி என இருவரும் பரமேஸ்வரி பாட்டி வீட்டிற்கு விருந்துக்கு வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, இருவரையும் ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் வரவேற்ற பரமேஸ்வரி பாட்டி, உட்கார வைத்து விருந்து வைக்கிறார். ரேவதி சாப்பிட்டு முடித்துவிட்டு கை கழுவ சென்ற சமயத்தில், பாட்டி கார்த்தியிடம் எப்படியாவது நீங்க சேர்ந்து வாழணும் என்று சொல்கிறாள். ரேவதி இதை கேட்டு விடுவாளா என்ற பில்டப் ஒரு பக்கம் எகிறுகிறது.

இன்னொருபக்கம் ஃபிளாஷ்பேக்கில் பாட்டி ரேவதியை தனியாக அழைத்து அவன் எதையும் பிளான் பண்ணி எல்லாம் செஞ்சா மாதிரி தெரியல. இந்த கல்யாணம் நடக்க உங்க அம்மா தானே காரணம்? அவன் மேல கோபப்படாத வாழ்க்கையை வாழ பாரு என்று அறிவுரை வழங்குகிறாள்.

இருவரும் விருந்து முடித்துவிட்டு வீட்டுக்கு வருகின்றனர். சாமுண்டீஸ்வரி கார்த்தியை அழைத்து என்ன மாப்ள விருந்தெல்லாம் எப்படி இருந்துச்சு என விசாரிக்கிறாள். உங்கள பாக்க அமெரிக்காவில் இருந்து என் பிரண்டு ஒருத்தி வரா என்று சொல்ல ரேவதி கடுப்பாகிறாள்.

அதற்கு சாமுண்டீஸ்வரி கல்யாணம் நடந்து முடிஞ்சா சொந்தக்காரங்க, கல்யாணத்துக்கு வராதவங்க வந்து பார்க்க தான் செய்வாங்க என்று சொல்லி ரேவதியின் வாயை அடக்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Kalyani Pandiyan S

TwittereMail
சு. கல்யாணி பாண்டியன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் முடித்திருக்கும் இவர், 7 வருடங்களுக்கு மேலாக, காட்சி ஊடகம் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம், பிசினஸ், விளையாட்டு, அரசியல், தேசம் - உலகம், பொழுது போக்கு உள்ளிட்ட துறைகளில் கட்டுரைகள் எழுதும் திறமை கொண்ட இவர், முன்னதாக புதியதலைமுறை, ஏபிபி நாடு உள்ளிட்ட செய்தி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பொழுது போக்கு செய்திகளை வழங்கி வருகிறார். இவருக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் ஆகும். திரைப்படங்கள் பார்ப்பது, நாவல்கள் படிப்பது, சிறுகதைகள் எழுதுவது, சினிமா சார்ந்த உரையாடல்கள் கேட்பது, நீண்ட தூர பைக் பயணங்கள், பழமையான கோயில்கள் பற்றி தெரிந்து கொள்வது உள்ளிட்டவை இவரது பொழுது போக்கு ஆகும்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.