கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 11 எபிசோட்: கார்த்தியை கொல்ல நடக்கும் சதி.. திடீர் என்ட்ரி கொடுக்கும் தீபாவின் அம்மா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 11 எபிசோட்: கார்த்தியை கொல்ல நடக்கும் சதி.. திடீர் என்ட்ரி கொடுக்கும் தீபாவின் அம்மா

கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 11 எபிசோட்: கார்த்தியை கொல்ல நடக்கும் சதி.. திடீர் என்ட்ரி கொடுக்கும் தீபாவின் அம்மா

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 11, 2025 03:45 PM IST

கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 11 எபிசோட்: ரேவதி கை வலியில் தவிக்க கார்த்திக் பேண்டேஜை கழட்டி விட்டு கைகளை ரிலாக்ஸ் செய்ய சொல்கிறான். இதையடுத்து தீபாவின் அம்மா ஜானகி கார்த்தியை நான்கு பேர் கத்தியால் குத்த வருவது போல் கனவு கண்டு அலறி எழுகிறாள்.

கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 11 எபிசோட்: கார்த்தியை கொல்ல நடக்கும் சதி.. திடீர் என்ட்ரி கொடுக்கும் தீபாவின் அம்மா
கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 11 எபிசோட்: கார்த்தியை கொல்ல நடக்கும் சதி.. திடீர் என்ட்ரி கொடுக்கும் தீபாவின் அம்மா

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி சிவகாமி நினைவுக்கு நாளுக்கு பூஜை செய்ய ஏற்பாடுகளை செய்ய சொல்லிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

ஆறுதல் கூறிய மைதிலி

அதாவது, ரேவதி கை வலியில் தவிக்க கார்த்திக் பேண்டேஜை கழட்டி விட்டு கைகளை ரிலாக்ஸ் செய்ய சொல்கிறான். இதையடுத்து தீபாவின் அம்மா ஜானகி கார்த்தியை நான்கு பேர் கத்தியால் குத்த வருவது போல் கனவு கண்டு அலறி எழுகிறாள். மைதிலி என்னாச்சு என்று கேட்க, ஜானகி நடந்ததை சொல்கிறாள்.

தீபா இறந்து போன பிறகும் மாப்பிள்ளை நம்மள மறக்காமல் இதுவரைக்கு பணம் அனுப்பிட்டு இருக்கார். அவருக்கு எதுவும் ஆகிட கூடாது என்று கவலைப்பட, மைதிலி ஆறுதல் சொல்கிறாள்.

அடுத்த நாள் காலையில் கார்த்திக் வெளியில் வந்திருக்க, முத்துவேல் ரெளடிகளை ஏற்பாடு செய்து கத்தியால் குத்த சொல்கிறான். மறுபக்கம் ஜானகி கோயிலில் அடிபிரதர்சனம் செய்யும் போது தடுமாறி விழ போக, ரேவதி தாங்கி பிடிக்கிறாள்.

தீபா - கார்த்திக்கை பார்க்கும் வாய்ப்பு

இதையடுத்து ஜானகியிடம் ரேவதி விசாரிக்க, தனது மாப்பிள்ளை நல்லா இருக்கணும் என்று பிராத்தனை செய்வதாக சொல்கிறாள். பிறகு ரேவதி ஜானகியை வீட்டில் ட்ராப் செய்ய, ஜானகி ரேவதியை வீட்டிற்குள் அழைக்கிறாள். கார்த்திக் தீபா ஒன்றாக இருக்கும் போட்டோவை பார்த்து விடுவாளா என்ற பில்டப் எகிறுகிறது.

அடுத்து சாமுண்டீஸ்வரி காவலாளி மகளை வர வைத்து தனது அம்மாவின் நினைவு நாளுக்கு பூஜை செய்ய, இன்னொரு பக்கம் பரமேஸ்வரி பாட்டி பூஜை செய்து பிரசாதம் கொண்டு வருகிறார். என் அம்மா சாவுக்கு நீங்க தான் காரணம், அப்படி இருக்கும் போது நீங்க எப்படி அவங்களுக்கு படையல் போடலாம் என்று சாமுண்டீஸ்வரி கோபப்படுகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.