கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 10 எபிசோட்: ஹோட்டல் ரூமில் ஊசலாடிய ஸ்வாதியின் மானம்;கார்த்திக் செய்தது என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 10 எபிசோட்: ஹோட்டல் ரூமில் ஊசலாடிய ஸ்வாதியின் மானம்;கார்த்திக் செய்தது என்ன?

கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 10 எபிசோட்: ஹோட்டல் ரூமில் ஊசலாடிய ஸ்வாதியின் மானம்;கார்த்திக் செய்தது என்ன?

Kalyani Pandiyan S HT Tamil
Updated Jun 10, 2025 01:36 PM IST

ஹோட்டலில் கார்த்திக் ஒரு பக்கம், போலீஸ் ஒரு பக்கம் என வந்து விட, கார்த்திக் ஒரு வழியாகஸ்வாதி இருக்கும் ரூமை தேடி கண்டு பிடித்து, அவர்களை அடித்து துவைத்து ஸ்வாதியை காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து வருகிறான்.

கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 10 எபிசோட்: ஹோட்டல் ரூமில் ஊசலாடிய ஸ்வாதியின் மானம்;கார்த்திக் செய்தது என்ன?
கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 10 எபிசோட்: ஹோட்டல் ரூமில் ஊசலாடிய ஸ்வாதியின் மானம்;கார்த்திக் செய்தது என்ன?

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துவேல் சதியால் ஸ்வாதி ஹோட்டலுக்கு வந்து சிக்கிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

பிராத்தல் சிக்கலில் ஸ்வாதி

அதாவது, ஜூஸ் குடித்த ஸ்வாதி மயங்கி விழ, மியூசிக் டைரக்டர் முத்துவேலுக்கு தகவல் கொடுத்தான். அவனோ போலீசுக்கு போன் செய்து ஹோட்டலில் அந்த ரூம் நம்பரில் பிராத்தல் நடப்பதாக சொல்கிறான்.

இந்தப்பக்கம் கார்த்திக் ரேவதியிடம் ஸ்வாதி நேத்து வச்சிட்டு இருந்த விசிட்டிங் கார்ட்ல, என்ன ஹோட்டல் பெயர் இருந்தது என்று விசாரித்து, கிளம்பி வருகிறான்.

ஹோட்டலில் கார்த்திக் ஒரு பக்கம், போலீஸ் ஒரு பக்கம் என வந்து விட, கார்த்திக் ஒரு வழியாகஸ்வாதி இருக்கும் ரூமை தேடி கண்டு பிடித்து, அவர்களை அடித்து துவைத்து ஸ்வாதியை காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து வருகிறான்.

வீட்டில் எல்லாரும் வெளியில் இருக்க கார்த்திக் இந்த நிலைமையில் ஸ்வாதியை எப்படி வீட்டிற்குள் அழைத்து செல்ல முடியும் என யோசித்து ரேவதிக்கு போன் போட்டு விஷயத்தை கூறினான். இந்த நிலையில், ரேவதி ரூமில் இருந்து கை வலிப்பதாக சத்தம் போட எல்லாரும் ரூமுக்கு செல்கின்றனர்.

இதற்கிடையே கிடைத்த கேப்பில் கார்த்திக் ஸ்வாதியை ரூமுக்கு அழைத்து சென்று விடுகிறான். அடுத்து ஸ்வாதி கண் விழிக்க கார்த்திக், ரேவதி எதுக்கு ஹோட்டலுக்கு போன? யாரு உன்னை போக சொன்னது என்று விசாரிக்க, அவள் ஒரு பொண்ணு தான் சொன்னதாக சொல்கிறாள்.

மிரட்டிய கார்த்திக்

கார்த்திக் அந்த பொண்ணுக்கு போன் போட்டு மிரட்ட எல்லாம் முத்துவேலின் சதி என்று தெரிய வருகிறது. இதனால் ஆவேசமாகும் கார்த்திக், நேராக முத்துவேலை சந்தித்து சிவனாண்டி கண் முன்னே அவனது கழுத்தை பிடித்து அலேக்காக தூக்கி ஒரு பொண்ணோட வாழ்க்கையில் இப்படியா விளையாடுவீங்க என்று எச்சரிக்கிறான்.

அடுத்து தனது அம்மா சிவகாமிக்கு இறந்த தினம் வருவதால், அந்த நாளில் புடவை வைத்து பூஜை செய்து அதை ஒரு பெண்ணுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்து சாமுண்டீஸ்வரி அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு சந்திரகலாவிற்கு உத்தரவு போடுகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.