HT TAMIL EXCLUSIVE: நா கூசும் நெகட்டிவ் கமெண்டுகள்.. எப்படித்தான் சமாளிக்கிறீர்கள்? -ரேஷ்மா பேட்டி! -
எந்த ஒரு நெகட்டிவான விஷயத்தையும் நம்மள பாதிக்க வைக்க விட கூடாது; அதுக்கு நம்ம எனர்ஜி கொடுக்க, கொடுக்க அது உங்க வாழ்கையில முக்கியமான விஷயமா மாறிக்கிட்டே இருக்கும். அதுக்கு இடம் கொடுக்கக்கூடாது. - ரேஷ்மா பசுபுலேட்டி!

‘பாக்கியலட்சுமி’, ‘கார்த்திகை தீபம்’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி மகளிர் தினத்தையொட்டி வசந்த் & கோ மற்றும் பஜாஜ் நிறுவனங்கள் இணைந்து சென்னையில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
பல பெண்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் சட்னி அரைக்கும் போட்டி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய சமையலறைகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பஜாஜ் நிஞ்ஜா, மிலிட்டரி, மற்றும் ஆர்மர் மிக்சர் கிரைண்டர் சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கு ரேஷ்மாவுடன் பிரத்யேகமாக உடையாடும் வாய்ப்பும் நமக்கு கிடைத்தது.
இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் ரேஷ்மாவுக்கு ஹார்ட்டுகள் எப்படி வாழ்த்துகளாக வருகிறதோ, அதே போல நா கூசும் கமெண்டுகளும் வந்து விழும். ஆனால், அதையெல்லாம் ரேஷ்மா இவர் கண்டுகொள்வதில்லை. பேட்டிகளில் இதைப்பற்றி கேட்டாலும், அதற்கு மிகவும் வெளிப்படையாக பதில் கூறிவிடுவார். இந்த தன்னபிக்கை எப்படி வந்தது? ஆன்லைன் டாக்சிக்கை எப்படி சமாளிக்கிறீர்கள் என்பது குறித்து கேட்டேன்.
அதற்கு பதிலளித்த அவர், ‘எந்த ஒரு நெகட்டிவான விஷயத்தையும் நம்மள பாதிக்க வைக்க விட கூடாது; அதுக்கு நம்ம எனர்ஜி கொடுக்க, கொடுக்க அது உங்க வாழ்கையில முக்கியமான விஷயமா மாறிக்கிட்டே இருக்கும். அதுக்கு இடம் கொடுக்கக்கூடாது.
நமக்கு எது தேவையோ, அதுக்கு மட்டும் எனர்ஜி கொடுத்தாதான் நாம நிம்மதியா இருக்க முடியும். என்ன சுத்தி இருக்குற மக்கள் எனக்கு எப்போதுமே சப்போர்ட்டிவா இருக்காங்க..அவங்கள தவிர வெளிய இருக்குறவங்க என்ன பத்தி என்ன பேசுறாங்க அப்படிங்கிறது எனக்குத் தேவையில்லாத ஒன்னு’ என்று பதிலளித்தார்.
மேலும் உடற்பயிற்சி குறித்து பேசிய அவர், ‘தோலுக்கும், உடம்புக்கும் ரொம்ப அக்கறை எடுத்துக்குறேன். இப்ப தியானத்தையும் ஆரம்பிச்சிருக்கேன். அது பெரிய கோலா இருக்கு... நிம்மதியா வாழணும்.. அவ்வளவுதான்’ என்றார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்