Karthigai Deepam: கார்த்திக் மீது விழுந்த பழி..அபிராமி வீட்டில் வெடித்த அண்ணன் தம்பி மோதல்.. பரபரக்கும் கார்த்திகை தீபம்
கார்த்திக் மீது விழுந்த பழி.. அபிராமி வீட்டில் வெடித்த அண்ணன் தம்பி மோதல் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், அருணின் ரிசார்ட்டை ரவுடிகள் அடித்து நொறுக்கிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அருணுக்கு விஷயம் தெரிய வர, அவன் ரிசார்ட்டிற்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைகிறான். அங்கு பிடிபட்டு கிடந்த ரவுடியை பிடித்து அடித்து விசாரிக்கும் போது, கார்த்திக்தான் பணம் கொடுத்து இப்படி செய்ய சொன்னதாக சொல்ல, அருண் அதை நம்ப மறுக்கிறான். ஆனால் ரவுடியோ, உண்மையாகவே அவர் தான் இப்படி செய்ய சொன்னார் என்று சொல்கிறான்.
இதனால் ஆவேசமாக வீட்டிற்கு வரும் அருண், கார்த்திக் சட்டையை பிடித்து சண்டைக்குப் போகிறான். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அபிராமி என்னாச்சு என்று கேட்க, ரிசார்ட்டை வாங்கிய விஷயத்தை சொல்லி, கார்த்திக்கிற்கு மட்டும் தான் இந்த விஷயம் தெரியும், அவன் பொறாமையில் இப்படி பண்ணி இருக்கான் என்று கத்துகிறான். இதனால் வீட்டில் பெரிய பிரச்சினை வெடிக்கிறது.
அருண், எனக்காக எதுவும் செய்ய மாட்டீர்கள், எனக்கு மரியாதை கொடுக்கிறது இல்ல என்று சண்டையிட ஐஸ்வர்யாவும் உடன் சேர்ந்து கொள்கிறாள். அபிராமி கார்த்திக் அப்படி செய்திருக்க மாட்டான் என்று சொல்ல, அருணோ நீங்க எப்பவும் அவனுக்கு தான் சப்போர்ட் பண்ணுவீங்க என்று கோபப்படுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
டாபிக்ஸ்