Karthigai Deepam: கார்த்தி வைத்த செக்மேட்.. ரம்யா கொடுத்த மிரட்டல், தீபா முடிவு என்ன?
Karthigai Deepam: அப்பா தரகருடன் வந்ததும் அதை பார்த்து ரம்யா அதிர்ச்சி அடைகிறாள். அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்ல தரகர் சில போட்டோக்களை காட்ட ஒரு மாப்பிளையை தேர்வு செய்து பேச சொல்கிறார். இதனால் ரம்யா இன்னும் அதிர்ச்சி அடைகிறாள்.
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய ( ஆகஸ்ட் 6 ) எபிசோட்டிற்கான அப்டேட் பற்றி விரிவாக பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இன்றைய எபிசோட்
இந்த சீரியலின் நேற்றைய ( ஆகஸ்ட் 5 ) எபிசோடில் ரம்யாவின் அப்பா தரகரை அழைத்து வந்து மாப்பிள்ளை பார்க்க சொல்லிய நிலையில் இன்று ( ஆகஸ்ட் 6 ) நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது அப்பா தரகருடன் வந்ததும் அதை பார்த்து ரம்யா அதிர்ச்சி அடைகிறாள். அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்ல தரகர் சில போட்டோக்களை காட்ட ஒரு மாப்பிளையை தேர்வு செய்து பேச சொல்கிறார். இதனால் ரம்யா இன்னும் அதிர்ச்சி அடைகிறாள்.
மாப்பிள்ளைக்கு போன்
அடுத்து விசுவநாதன் கார்த்தியை சந்தித்து நீங்க சொன்ன மாதிரியே பண்ணிட்டேன் தம்பி என்று சொல்ல இன்னொரு பக்கம் ரம்யா தரகரை மடக்கி மாப்பிள்ளையின் போன் நம்பரை வாங்குகிறாள். பிறகு ரியாவது சந்தித்து நடந்த விஷயத்தை சொல்லி உதவி கேட்கிறாள். பிறகு மாப்பிள்ளைக்கு போன் செய்து நீ பொண்ணு பார்க்க வரவே கூடாது, இல்லனா என்னை பிடிக்கலைனு சொல்லிடணும் என்று மிரட்ட அவனும் ஓகே என்று போனை வைக்கிறான்.
ஜானகி தீபாவுக்கு இந்த கல்யாணம் நடக்க கூடாது
அதன் பிறகு தர்மலிங்கம், ஜானகி தீபாவுக்கு இந்த கல்யாணம் நடக்க கூடாது, ஒருவேளை கல்யாணம் நடந்தா அபிராமி அம்மா உயிருக்கே ஆபத்து ஆகிரும், எப்படியாவது இதை நிறுத்திடனும் என்று பேசி கொண்டிருக்க ஐஸ்வர்யா இதை கேட்டு விடுகிறாள்.
கார்த்தியிடம் விஷயத்தை சொல்லிடலாம் என்று முடிவெடுக்கும் அவள் அவனை தேடி ரூமுக்கு வர தீபா இருக்க தீபாவிடம் மொத்த விஷயத்தையும் உடைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
நேற்றைய எபிசோட்
ரம்யாவின் அப்பா அதிர்ச்சி அடைய, இறுதியில் இது அவருடைய கனவு என தெரிய வருகிறது. இதனால் கார்த்திக்கிடம் உண்மையை சொல்ல வேண்டாம் என்று முடிவெடுக்கிறார். ஆனால் கார்த்திக் அவர் சொன்னதால் வீட்டிற்கு வந்து விட, உங்களுக்கு மாற்றி போன் செய்து விட்டதாக சமாளித்து விடுகிறார்.
அதன் பிறகு கார்த்திக், தீபா கோயிலுக்கு வருகிறார்கள். கார்த்திக் காரை பார்க் செய்து விட்டு வர போன கேப்பில், தலையில் இருந்த பூவை எடுத்து விட்டு கார்த்திக் வந்ததும், பூ வாங்கி வைத்து விட சொல்கிறாள்
கார்த்திக் உங்க தலையில் ஏற்கனேவே பூ இருந்ததே என்று கேட்க தீபா இல்லை என்று சொல்கிறாள்.பூ கடைக்காரர் அந்த பொண்ணு உங்க கையால் பூ வச்சுக்கணும்னு ஆசைப்படுத்து வாங்கி வச்சி விடுங்க என்று சொல்கிறார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்