தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Karthigai Deepam Episode On February 8

Karthigai Deepam Episode: ஐஸ்வர்யாவிடம் கார்த்திக் கேட்ட கேள்வி.. வீட்டில் வெடித்த பிரச்னை

Aarthi Balaji HT Tamil
Feb 08, 2024 02:30 PM IST

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் பற்றி பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம்

ட்ரெண்டிங் செய்திகள்

அதாவது, ஆனந்த் ஓரிடத்தில் ஒளிந்து கொள்ள கார்த்திக் மீனாட்சியை பார்க்க மீனாட்சி துணி எடுக்க வந்ததாக சொல்ல அவன் அவளை வீட்டிற்கு அனுப்பி விட்டு ஆனந்தை தேடி மேலே செல்ல ஆனந்த் அந்த பெண்ணை கூட்டி கொண்டு வெளியே எஸ்கேப் ஆகி விடுகிறான்.

பிறகு அங்கிருந்து கிளப்பி வீட்டிற்கு வரும் கார்த்திக் ஐஸ்வர்யாவை முறைத்து கொண்டே ரூமுக்கு சென்று என்ன தீபா கல்யாணம் எல்லாம் எப்படி நடந்தது என்று கேட்க அவள் உண்மையை மறைத்து நல்லா நடந்தது என சொல்கிறாள். புடவையை பார்த்து என்ன சொன்னாங்க என்று கேட்க நல்லா இருந்ததாக சொன்னாங்க என்று சமாளிக்கிறாள்.

எல்லாமே எனக்கு தெரியும் என கார்த்திக் சொன்னதும் தீபா கலங்கி அழுகிறாள். இது எப்படி நடந்தது? யார் பண்ணாங்கனு எனக்கு தெரியும் என சொல்லி வெளியே வந்து ஐஸ்வர்யாவை பார்த்து எதுக்கு கடைக்கு வந்தீங்க, எதுக்கு எங்க ரூமுக்கு வந்தீங்க. புடவையை நீங்க தான் மாத்தி வச்சிருப்பீங்கனு எனக்கு தெரியும் என சொல்ல ஐஸ்வர்யா நான் ஒன்னும் பண்ணல என்று சொல்கிறாள்.

கார்த்திக் ஐஸ்வர்யாவை கேள்வி கேட்டு கொண்டிருக்க அருண் ஐஸ்வர்யாவுக்கு சப்போர்ட் செய்து தீபா உண்மையை மறைத்த விஷயத்தை எடுத்து பேச இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது. அபிராமி இதுக்கு தான் கார்த்திக்கிட்ட நடந்த விஷயத்தை சொல்லாதேன்னு சொன்னேன் என்று கோபப்பட கார்த்திக் தீபா சொல்லல பெரியம்மா தான் சொன்னாங்க என்று கூறுகிறான்.

ஐஸ்வர்யா பொண்டாட்டியை விட்டு கொடுக்கிறானா பாரு என சொல்ல கார்த்திக் தேவையில்லாமல் பேசாதீங்க என்று சொல்ல மீண்டும் அருணுக்கும் கார்த்திக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது. இதனால் கோபமடையும் அபிராமி போதும் நிறுத்துங்க என சத்தம் போடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.