கார்த்திகை தீபம் சீரியல் மார்ச் 13 எபிசோட்: மாப்பிள்ளையாக வந்து நின்ற மகேஷ்.. சவால் விடும் மாயா.. நடக்கப்போவது என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கார்த்திகை தீபம் சீரியல் மார்ச் 13 எபிசோட்: மாப்பிள்ளையாக வந்து நின்ற மகேஷ்.. சவால் விடும் மாயா.. நடக்கப்போவது என்ன?

கார்த்திகை தீபம் சீரியல் மார்ச் 13 எபிசோட்: மாப்பிள்ளையாக வந்து நின்ற மகேஷ்.. சவால் விடும் மாயா.. நடக்கப்போவது என்ன?

Karthikeyan S HT Tamil
Published Mar 13, 2025 01:14 PM IST

கார்த்திகை தீபம்: கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் பாட்டி முருகனிடம் வந்து கார்த்திக் ரேவதிக்கு கல்யாணம் நடக்கணும் என்று முறையிட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

கார்த்திகை தீபம் மார்ச் 13 எபிசோட்: மாப்பிள்ளையாக வந்து நின்ற மகேஷ்.. சவால் விடும் மாயா.. நடக்கப்போவது என்ன?
கார்த்திகை தீபம் மார்ச் 13 எபிசோட்: மாப்பிள்ளையாக வந்து நின்ற மகேஷ்.. சவால் விடும் மாயா.. நடக்கப்போவது என்ன?

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாட்டி முருகனிடம் வந்து கார்த்திக் ரேவதிக்கு கல்யாணம் நடக்கணும் என்று முறையிட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, அடுத்த நாள் காலையில் விடிய மாப்பிள்ளையை கூப்பிட்டு வாங்க என்று சொல்ல மகேஷ் வந்து நிற்க பாட்டியும் அவரது டீமும் அதிர்ச்சி அடைகின்றனர். பாட்டி இவன் எப்படி டா இங்க? யாரை கடத்தினீங்க என்று கேட்க அதை நான் சொல்றேன் மகேஷ்க்கு பதிலாக நவீனை கடத்திட்டாங்க. இந்த கல்யாணத்தை நாங்க நடத்தி காட்டுறோம் என்று சவால் விடுகிறாள். இதனால் மயில் வாகனம் இவ எல்லாம் சவால் விடுற மாதிரி ஆகிருச்சே என்று கடுப்பாகிறான்.

இதனைத்தொடர்ந்து கார்த்திக் நர்ஸை அழைத்து கொண்டு மண்டபம் நோக்கி வருகிறான். மறுபக்கம் சாமுண்டீஸ்வரி ரவுடிகளை அழைத்து ரகசியமாக தனது திட்டத்தை சொல்கிறாள். இதே நேரத்தில் சிவனாண்டி என்ட்ரி கொடுக்க சாமுண்டீஸ்வரி வா சிவனாண்டி சரியான நேரத்திற்கு தான் வந்திருக்க என்று வரவேற்கிறாள்.

50 வகையான டிஷ் ஏற்பாடு செய்து இருக்கேன்.. வயிறு நிறைய சாப்பிட்டு என் பொண்ணை மனசார வாழ்த்திட்டு போ என்று சொல்கிறாள். சிவனாண்டி சிரித்து விட்டு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்று சொல்கிறான்.

அடுத்து உள்ளே ரேவதி ரெடியாகி கொண்டிருக்க தோழிகளும் சகோதரிகளும் அவளை கிண்டல் அடிக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Karthikeyan S

TwittereMail
சு.கார்த்திகேயன், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர். மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டம் பெற்றவர். 2011 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். கல்வி வானொலி ஞானவாணி பண்பலை, ஈ நாடு டிஜிட்டல், ஒன் இந்தியா, டாப் தமிழ் நியூஸ், டைம்ஸ் நவ் நிறுவனங்களைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், அரசியல், அன்றாட நிகழ்வுகள், தமிழ்நாடு, தேசம், சர்வதேசம், ஆன்மிகம் மற்றும் யூடியூப் வீடியோ உள்ளிட்ட அனைத்து பிரிவுகளில் செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.