மகேஷ் செய்த சேட்டை.. மாயா எடுத்த வாந்தி.. அப்பாவியாக நிற்கும் ரேவதி.. - கார்த்திகை தீபம் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மகேஷ் செய்த சேட்டை.. மாயா எடுத்த வாந்தி.. அப்பாவியாக நிற்கும் ரேவதி.. - கார்த்திகை தீபம் அப்டேட்

மகேஷ் செய்த சேட்டை.. மாயா எடுத்த வாந்தி.. அப்பாவியாக நிற்கும் ரேவதி.. - கார்த்திகை தீபம் அப்டேட்

Kalyani Pandiyan S HT Tamil
Dec 13, 2024 02:11 PM IST

நேற்றைய எபிசோடில், ரேவதி கண்டிஷன் உடன் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மகேஷ் செய்த சேட்டை.. மாயா எடுத்த வாந்தி.. அப்பாவியாக நிற்கும் ரேவதி.. - கார்த்திகை தீபம் அப்டேட்
மகேஷ் செய்த சேட்டை.. மாயா எடுத்த வாந்தி.. அப்பாவியாக நிற்கும் ரேவதி.. - கார்த்திகை தீபம் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், ரேவதி கண்டிஷன் உடன் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

கல்யாணத்திற்கு சம்மதம்

அதாவது, ரேவதி யாரோ ஒருவருக்கு போன் செய்து கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டேன். அம்மா நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க இதற்கிடையில், நம்மளுடைய கல்யாணத்துக்கான வேலைகளை கவனிக்கணும் என சொல்லி ஃபோனை வைக்கிறாள்.

அடுத்து பரமேஸ்வரி பாட்டி கோயிலுக்கு வந்து, கார்த்தியின் ஜாதகத்தை கொடுத்து, ஜோதிடர் ஒருவரிடம் அவனுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கேட்கிறாள். அப்போது கார்த்திக் முதல் மனைவியை இழந்தவர் என்ற விஷயத்தை சரியாக சொல்லும் ஜோசியர் கூடிய விரைவில் ரத்த பந்தத்தில் உள்ள ஒரு பெண்ணுடன் இவருக்கு கல்யாணம் நடக்கும் என சொல்ல, பரமேஸ்வரி பாட்டி அதை கேட்டு சந்தோஷம் அடைகிறாள்.

காதல் முளைத்த காரணம்..

அதைத்தொடர்ந்து இங்கே சாமுண்டீஸ்வரி வீட்டில் ரேவதி கார்த்தியுடன் கிளம்பி தன்னுடைய காதலன் மகேசை பார்க்க வருகிறாள். வரும் வழியில் கார்த்தியிடம் அவள், சண்முகம் என்பவர் எங்க வயல் காட்டில் வேலை செய்து வந்தார். திடீரென அவர் இறந்துவிட, ஊர் முழுக்க அவரது இறப்புக்கு காரணம், எங்க அம்மா தான் என பேச தொடங்கிட்டாங்க.

அதனால நான் அவங்களோட குடும்பத்துக்கு உதவ முடிவெடுத்தேன். அவருடைய மனைவி மாயாவும் தம்பி மகேஷூம் இருக்கிறார்கள். மகேஷ் கல்லூரி படிக்க நான்தான் பணம் கொடுத்து உதவினேன். பிறகு அவரை எனக்கு பிடித்து போய் காதலிக்க தொடங்கிட்டேன் என்று சொல்கிறாள்.

மற்றொரு பக்கம், சண்முகம் வீட்டிற்கு வர, மாயா இவர்களை வரவேற்கிறாள். அடுத்து மகேஷ் அப்பாவி போல் வந்து நிற்க கார்த்திக் அவனை பார்த்து ஷாக் ஆகிறான். மாயா மகேஷ் யார்கிட்டயும் அதிகம் பேசாம அவங்க உண்டு, அவன் வேலை உண்டுன்னு இருக்கிறவன் என அறிமுகம் செய்கிறாள்.

பிறகு கார்த்திக் மகேஷின் போட்டோவை வாங்கிக் கொண்டு வெளியே வருகிறான். ரேவதி வெளியே வந்ததும், உண்மையாகவே இவன புடிச்சு போய் தான் காதலிச்சியா? இல்ல பாவப்பட்டு காதலிச்சியா என கேட்க,ரேவதி அதற்கு சரியாக பதில் தெரியவில்லை என சொல்கிறாள்.

அதைத்தொடர்ந்து சண்முகம் வீட்டில் மாயா திடீரென வாந்தி எடுக்க, மகேஷ் பாவமாக வந்து நின்று தன்னுடைய கெட்டப்பை அப்படியே முழுசாக மாற்றி வில்ல தனத்தோடு பார்க்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.