திட்டத்தை சுக்கு நூறாக்கிய ஜோசியர்.. சாமுண்டீஸ்வரி எடுத்த திடீர் முடிவு - கார்த்திகை தீபம் அப்டேட்!
சந்திரகலாவின் திட்டத்தை சுக்கு நூறாக்கிய ஜோசியர்.. சாமுண்டீஸ்வரி எடுத்த திடீர் முடிவு - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

சந்திரகலாவின் திட்டத்தை சுக்கு நூறாக்கிய ஜோசியர்.. சாமுண்டீஸ்வரி எடுத்த திடீர் முடிவு - கார்த்திகை தீபம் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சந்திரகலா சாமுண்டேஸ்வரியின் துணியை பற்ற வைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சாமுண்டீஸ்வரி புடவையில் தீ
அதாவது, சாமுண்டீஸ்வரி பூஜையறைக்குள் இருக்க துணியை பற்ற வைத்த சகுந்தலா,.யாருக்கும் தெரியாமல் வெளியே வந்து விடுகிறாள். ஏதோ கருகும் வாசனை வருவதை உணர்ந்த சாமுண்டீஸ்வரி ஒரு கட்டத்தில் தனது புடவை பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்.