‘தம்பி வரார் வழிவிடு’.. எம்.ஜி.ஆராக அவதரிக்கும் கார்த்தி.. சைடு கேப்பில் அப்டேட்டை தூக்கிப்போட்ட ஞானவேல்!
‘தம்பி வரார் வழிவிடு’ என்ற கேப்ஷனோடு நடிகர் கார்த்தியின் அடுத்தப்பட அப்டேட்டை, அந்தப்படத்தை தயாரிக்கும் ஸ்டியோ கீரின் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

கார்த்தியின் பிறந்தநாளை ஒட்டி, 'வா வாத்தியார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, படக்குழு வெளியிட்டது. இந்த நிலையில், இந்தப்படத்தின் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ‘தம்பி வரார் வழிவிடு’ என்ற கேப்ஷனுடன் இந்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் கார்த்தியுடன் சத்யராஜ், ராஜ்கிரண், கீர்த்தி ஷெட்டி, ஜி. எம். குமார் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, இசையை சந்தோஷ் நாராயணன் வழங்கியுள்ளார். கலை இயக்கத்தை டி.ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை, வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.