Sai Pallavi: "காதலை கொட்டி பசங்களை பைத்தியமாக்குறீங்க.." சாய் பல்லவியை வெட்கப்பட வைத்த கார்த்தி
Sai Pallavi: திரையிலேயே காதலை முழுசா கொட்டி பசங்களை பைத்தியமாக்குறீங்க என்று சாய்பல்லவியை நடிகர் கார்த்தி பாராட்டினார். பின்னர் பேசிய சாய் பல்லவி, கார்த்தியிடம் புனிதத்தன்மை இருக்கிறது என்று கூறி அவரை வெட்கப்பட வைத்துள்ளார்.

நாக சைதன்யா - சாய்பல்லவி நடிப்பில் தெலுங்கில் உருவாகியிருக்கும் படம் தண்டல். தமிழிலும் இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் கார்த்தி, சாய் பல்லவியை புகழ்ந்து பேசினார். இதேபோல் சாய் பல்லவியும் பேசுபோது கார்த்தியை வெட்கப்பட வைத்தார்.
காதலை கொட்டி கொடுக்கும் சாய்பல்லவி
சாய் பல்லவி குறித்து கார்த்தி கூறியதாவது, "சாய் பல்லவி, நீங்கள் ரொம்ப ஸ்பெஷல். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் நீங்கள் உயிர் கொடுப்பது சிறப்பாக உள்ளது. ஒரு பையனை காதலிப்பது என்றால் கொட்டி தீர்த்திவிடுகிறீர்கள். இதனாலேயே பசங்க உங்க மேல பைத்தியக்கார தனமாக இருக்காங்க.
டான்ஸ் பத்தி சொல்லவே வேண்டாம். வலி, வயதுக்கு மீறிய அனுபவமா இருக்கலாம் நீங்கள் எப்படி புரிந்து கொள்கிறீர்கள் என்பதை கூட அமரன் பார்த்த பிறகு உங்களிடம் பேசினேன். மலர் டீச்சரா இருந்தாலும் சரி, இந்துவாக இருந்தாலும் சரி அந்த படத்துக்கு நிறையா கொடுக்குறீங்க. இதை செய்வதற்கு நன்றி.
