கன்னட மொழி சர்ச்சை விவகாரம்.. ஒத்தி வைக்கப்பட்ட விசாரணை.. நீளும் தக் லைஃப் பட தடை..
கமலின் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிடுவது தொடர்பான வழக்கின் விசாரணையை கர்நாடக உயர் நீதிமன்றம் வரும் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

கன்னட மொழி சர்ச்சை விவகாரம்.. ஒத்தி வைக்கப்பட்ட விசாரணை.. நீளும் தக் லைஃப் பட தடை..
சென்னையில் நடந்த தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் ‘கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது" என்று கூறினார். இவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கர்நாடகாவில் கமலுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டன. தக் லைஃப் பேனர்கள் கிழிக்கப்பட்டன. கமலின் புகைப்படம் எரிக்கப்பட்டன.
தக் லைஃப் பட தடை
கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை (கே.எஃப்.சி.சி) கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பு உட்பட பல அமைப்புகள் கமல்ஹாசனை மன்னிப்புக்கேட்க கோரியது. ஆனால், கமல்ஹாசன் மன்னிப்புகேட்க மறுத்து, அரசியல் வாதிகள் மொழிப்பிரச்சினையில் தலையிட வேண்டாம். அன்பு ஒரு போது மன்னிப்புக் கேட்காது என்றார். அதனைதொடர்ந்து கர்நாடகாவில் தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்கப்பட்டது.