மதியம் 12 மணி வரை தான் டைம்.. அதுக்குள்ள கமல் மன்னிப்பு கேட்கலன்னா..! கமலுக்கு வந்த கெடு ..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மதியம் 12 மணி வரை தான் டைம்.. அதுக்குள்ள கமல் மன்னிப்பு கேட்கலன்னா..! கமலுக்கு வந்த கெடு ..

மதியம் 12 மணி வரை தான் டைம்.. அதுக்குள்ள கமல் மன்னிப்பு கேட்கலன்னா..! கமலுக்கு வந்த கெடு ..

Malavica Natarajan HT Tamil
Published Jun 03, 2025 09:57 AM IST

நடிகர் கமல் ஹாசன் கன்னட மொழி குறித்து பேசியதற்கு இன்று நண்பகல் 12 மணிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடக திரைப்பட வர்த்தக சங்க தலைவர் கெடு விதித்துள்ளார்.

மதியம் 12 மணி வரை தான் டைம்.. அதுக்குள்ள கமல் மன்னிப்பு கேட்கலன்னா..! கமலுக்கு வந்த கெடு ..
மதியம் 12 மணி வரை தான் டைம்.. அதுக்குள்ள கமல் மன்னிப்பு கேட்கலன்னா..! கமலுக்கு வந்த கெடு ..

மன்னிப்பு கேட்க மறுப்பு

கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை (கே.எஃப்.சி.சி) கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பு உட்பட பல அமைப்புகள் கமல்ஹாசனை மன்னிப்புக்கேட்க கோரியது. ஆனால், கமல்ஹாசன் மன்னிப்புகேட்க மறுத்து, அரசியல் வாதிகள் மொழிப்பிரச்சினையில் தலையிட வேண்டாம். அன்பு ஒரு போது மன்னிப்புக் கேட்காது என்றார். அதனைதொடர்ந்து கர்நாடகாவில் தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

நீதிமன்றம் சென்ற கமல்

கர்நாடகா தவிர மற்ற மாநிலங்களில் தக் லைஃப் படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கிய நிலையில், கர்நாடகத்தில் கமலுக்கும் தக் லைஃப் படத்திற்குமான எதிர்ப்பு குரல் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்த நிலையில் தான் கமல், கர்நாடகாவில் 'தக் லைப்' படத்தை வெளியிட கோரி கமல்ஹாசன் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

பாதுகாப்பு கோரிக்கை

தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலின் தலைமை நிர்வாக அதிகாரி வழியாக இந்த மனுவை தாக்கல் செய்திருக்கும் கமல்ஹாசன், அந்த மனுவில் கர்நாடக மாநில அரசு, காவல் துறை மற்றும் திரைப்பட வர்த்தக அமைப்புகள் தக் லைஃப் படத்தின் வெளியீட்டைத் தடுக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும் திரையிடலுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

கமலுக்கு கெடு

இந்த சமயத்தில் தான் கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கம் கமல் கூறிய வாரத்தைக்கு மன்னிப்பு கேட்க கெடு விதித்துள்ளது. இதுதொடர்பாக கர்நாடக திரைப்பட சங்க தலைவர் நரசிம்மலு பேசுகையில், 'கமல் துபாயிலிருந்து சென்னை வர உள்ளார். அந்த சமயத்தில் அவர் மன்னிப்பு கேட்பதற்கான வாய்ப்புகள் குறைவு தான். இருந்தாலும் நாங்கள் அவருக்கு ஒரு கெடு விதித்துள்ளோம். அவர் இன்று நண்பகல் 12 மணிக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகாது' என எச்சரித்தார்.

நீதியை நம்புகிறேன்

அண்மையில், சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் இந்த விவகாரம் குறித்து பேசும் போதும் அவர் மன்னிப்புக்கேட்க மறுத்து விட்டார். ‘ இது ஜனநாயகம். நான் சட்டம் மற்றும் நீதியை நம்புகிறேன். கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்கள் மீது நான் வைத்திருக்கும் பாசம் உண்மையானது; நல்லெண்ணம் கொண்ட யாரும் அதை சந்தேகிக்க மாட்டார்கள். நான் தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இல்லையென்றால் மாட்டேன் என்றார் கமல்ஹாசன்.

அடிபணிய மாட்டேன்

கடந்த காலங்களில் இதேபோன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு இருக்கிறேன். ஆனால் அரசியல் அழுத்தம் அல்லது உணர்ச்சி ரீதியான வற்புறுத்தலுக்கு அடிபணிய மாட்டேன் என்று கூறினார்.