நடிகர்களிடம் மாற்றம் வேண்டும் - கரீனா கபூர்
ஒரு படத்தின் வணிக வெற்றிக்கு நட்சத்திரம் உத்தரவாதம் அளிக்க முடியாது என நடிகை கரீனா கபூர் கூறியுள்ளார்.

நடிகை கரீனா கபூர் தற்போது அமீர்கானுக்கு ஜோடியாக லால் சிங் சத்தா படத்தில் நடித்து உள்ளார். இப்படம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருப்பதால் வணிக ரீதியாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகக் கூறியுள்ளார்.
நடிகை கரீனா கபூர் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில், "இன்று, நட்சத்திரங்கள் காலடியில் உள்ளன. என்ன நடக்கிறது, எந்த திசையில் நாம் செல்ல வேண்டும் என்று யாருக்கும் தெரியாது. எனவே ஸ்கிரிப்ட் மற்றும் சிறந்த விஷயங்களைப் படிப்பதில் நாம் நமது கவனம் செலுத்துவோம்.
மக்கள் இப்போது மாற்றத்தை விரும்புகின்றனர். கோவிட் தொற்று காரணமாக மக்கள் மத்தியில் இந்த மாற்றம் வந்துள்ளது. யாரும் இல்லை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். பாலிவுட்டில் இங்கு யாரும் கடவுள் இல்லை.
இன்று என்னைப் பொறுத்தவரை நட்சத்திரங்கள் இல்லை. அனைவரும் நடிகர்கள் தான். நாளை யாரோ ஒருவரின் படம் ₹ 50 கோடி ஓபனிங் எடுக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை . வெற்றியும், நட்சத்திரமும் முக்கியமில்லை.
இனி யார் வேண்டுமானாலும் 50 மில்லியன் வசூல் செய்யலாம். அதனால் அவர்கள் மிகப்பெரிய நட்சத்திரமாக மாறிவிட்டனர் என்பது அர்த்தம் கிடையாது. கலைஞருக்கு பல்வேறு வேலைகள் இருக்கிறது. இன்று நடிகர்கள் தங்கள் வேலையை ஆராய்ச்சி செய்து நடிக்க வேண்டும்" என்றார்.

டாபிக்ஸ்