கர்ப்பகால வதந்திகளுக்கு பதிலளித்த கரீனா கபூர்
நடிகை கரீனா கபூர் தான் கர்ப்பமாக இருப்பதாக வெளியான வதந்திகளுக்கு நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.
<p>கர்ப்பகால வதந்திகளுக்கு பதிலளித்த கரீனா கபூர்</p>
பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான், பிரபல நடிகர் சைஃப் அலி கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தைமூர் அலி கான், ஜஹாங்கிர் அலி கான் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இவர்கள் இருவரும் படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கரீனா தற்போது தனது கணவர் சைஃப் அலி கான் மற்றும் மகன்கள் தைமூர் மற்றும் ஜெஹ் ஆகியோருடன் ஐரோப்பாற்கு விடுமுறை சென்று இருந்தார்.
