'ஷிவாண்ணா நலமாக உள்ளார்.. நீங்கள் தான் எங்கள் கடவுள்' உருகிய சிவராஜ்குமார் மனைவி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'ஷிவாண்ணா நலமாக உள்ளார்.. நீங்கள் தான் எங்கள் கடவுள்' உருகிய சிவராஜ்குமார் மனைவி

'ஷிவாண்ணா நலமாக உள்ளார்.. நீங்கள் தான் எங்கள் கடவுள்' உருகிய சிவராஜ்குமார் மனைவி

Malavica Natarajan HT Tamil
Dec 25, 2024 01:57 PM IST

கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமாருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்ததாக அவரது மனைவி கூறியுள்ளார்.

'ஷிவாண்ணா நலமாக உள்ளார்.. நீங்கள் தான் எங்கள் கடவுள்' உருகிய சிவராஜ்குமார் மனைவி
'ஷிவாண்ணா நலமாக உள்ளார்.. நீங்கள் தான் எங்கள் கடவுள்' உருகிய சிவராஜ்குமார் மனைவி

வெற்றிகரமாக முடிவடைந்த அறுவை சிகிச்சை

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 18ம் தேதி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இதையடுத்து அவருக்கு நேற்று மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த பின், மருத்துவர்கள் அவரது உடல்நலம் குறித்து பேசினர்.

மருத்துவர் மனோகர் சிவராஜ்குமார் குறித்து பேசுகையில், அவரது சிறுநீரகங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளன. அவ்வாறு செய்வதன் மூலம் அவரது நோய் முழுமையாக குணமாகும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவரது சொந்த குடலைப் பயன்படுத்தி செயற்கை சிறுநீரகம் மீண்டும் பொருத்தப்பட்டது.

மிகவும் பலமானவர்

ஷிவாண்ணா மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் தைரியமானவர். அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. சிகிச்சை பெற்ற பிறகும் அவர் சிகிச்சைகளுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு வருகிறார்.

அவர் மிகவும் திடமானவர். அவர் விரைவில் குணமடைந்து உங்களை மீண்டும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் விருப்பங்களால், சில வாரங்களுக்குப் பிறகு அவர் குணமடைவார் என்றார்.

சிவராஜ்குமாரின் மனைவி விளக்கம்

சிவராஜ்குமார் குணமடைந்து வருகிறார். நாங்கள் இங்கு வந்ததற்கான நோக்கம் வெற்றிகரமான நிலையில் உள்ளது. நீங்கள் அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்தீர்கள். உங்கள் அனைவரின் ஆசிகளும் ஆசீர்வாதங்களும் அவர் மீதே உள்ளது. இதை என் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன். டாக்டர்களும் எங்களுக்கு கடவுள் தான்" என்றார்.

இந்நிலையில், இன்னும் சில நாட்களில் சிவராஜ்குமாருடன் பேசலாம். அதற்காக சில நெறிமுறைகள் உள்ளன. தற்போது அவர் பேசாததால் யாரும் பயப்பட வேண்டாம். சிவராஜ் குமாரின் புகைப்படங்களையும் பகிர்வோம். இன்னும் மூன்று, நான்கு நாட்களுக்கு அவர்களுடன் பேச முடியாது. அவர் குணமடையும் வரை அனைவரும் பொருத்திருக்க வேண்டும் என மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளது.

உலாவும் வதந்திகள்

இந்நிலையில், இவரது இந்த நிலையை எண்ணி கன்னட சினிமா திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அதனை அடுத்து தற்போது சிவராஜ் குமாரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை பற்றிய பல தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வந்தன. நடிகர் சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் வந்த காரணத்தால் அவரது சொத்துக்களை பொது மக்களுக்கு எழுதி வைத்ததாகவும் ஒரு செய்தி உலா வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை.

நம்பிக்கை அளித்த சிவராஜ்குமார்

முன்னதாக, புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் முன் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தபோது, "புற்றுநோய் என்று கூறியதும் எனக்கும் பதற்றமாக தான் இருந்தது. ஆனால் பதற்றம் அடைய வேண்டாம். இதற்கான அனைத்து பரிசோதனையும் எடுத்த பின்பு இதனை குணமாக்க முடியும் என மருத்துவர் கூறியிருக்கிறார்.

ரசிகர்கள் என் மீது வைத்திருந்த அன்பிற்கு மிகவும் நன்றி எனத் தெரிவித்திருந்தார். மேலும் மியாமி கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் டிசம்பர் 24ஆம் தேதி தனக்கு அறுவை சிகிச்சை நடக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.