இப்படி எல்லாமா படத்துக்கு பேரு வைப்பாங்க? பான் இந்தியா படத்துக்கு நூதனமாக பேரு வச்ச படக்குழு!- சிவராஜ் குமார் ஷேரிங்ஸ்..
கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ் குமார் தனது வரவிருக்கும் பான் இந்தியா படமான 45 குறித்து பல சுவாரசிய தகவல்களை மக்களிடம் பகிர்ந்து கொண்டார்.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் சமீபத்தில் ரஜினிகாந்த் சின்ஜெயிலர் படத்தில் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிக நெருக்கமானார். இவர், தற்போது, கன்னட நடிகர் உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி உடன் இணைந்து 45 என்ற பான் இந்தியா படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் குறித்தும் தனது புற்றுநோய் குறித்தும் 45 பட விழாவில் பேசியுள்ளார்.
45 படம்
கன்னடத்தில் பிரபலமான ஹீரோக்களான சிவராஜ் குமார், உப்பேந்திரா, நடிகர் ராஜ் பி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த படம்தான் 45. சூராஜ் புரொடக்ஷன்ஸ் பேனரில் உமா ரமேஷ் ரெட்டி, எம்.ரமேஷ் ரெட்டி ஆகியோர் தயாரித்த இந்த படத்தை இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இயக்கியுள்ளார். பான் இந்தியா படமாக உருவான 45 படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 45 படத்தின் டீஸர் லான்ச் நிகழ்ச்சி சமீபத்தில் ஹைதராபாத்தில் கோலாகலமாக நடத்தப்பட்டது.