Actor Nani: நானி பட கதை அப்படியே என படத்தின் காபி.. மிகவும் மலிவான செயல்.. குண்டை தூக்கி போட்ட தயாரிப்பாளர்
Telugu Actor Nani: தெலுங்கு நடிகர் நானி சினிமா கேரியரில் அவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்த படம் நானி. ஆனால் இந்த படம் தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி இளம் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் நானி. கடந்த 2023இல் இவரது நடிப்பில் வெளியான ஹாய் நானா படம் சூப்பர் ஹிட்டானது. நானி சினிமா கேரியரில் அவருக்கு ஹிட் கொடுத்த படங்களில் ஒன்றாக இருந்து வரும் நானி தற்போது கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
கன்னட சினிமா தயாரிப்பாளரும், கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி நடித்த அவனே ஸ்ரீமன்நாராயணா படத்தை தயாரித்த புஷ்கரா மல்லகார்ஜுனய்யா இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். தனது பீம சேனா நல மகராஜா என்ற படத்தின் கதையை காபி அடித்திருப்பதாக கூறியிருக்கும் அவர், இது ஒரு மலியான செயல் என தனது இன்ஸ்டா ஸ்டோரியில் குறிப்பிட்டிருந்தார். இந்த இன்ஸ்டா ஸ்டோரி அவர் பதிவிட்ட சில நிமிடங்களில் நீக்கியுள்ளார்.
நானி மீது பாய்ந்த தயாரிப்பாளர் மல்லிகார்ஜுனய்யா
ஹாய் நானா மற்றும் பீம சேனா நல மகாராஜா ஆகிய படங்களில் போஸ்டரை பகிர்ந்து " ரீமேக் உரிமை பெறாமலேயே எனது பீம சேனா நல மகாராஜா படத்தை காப்பி அடித்து அப்படியே ஹாய் நானா படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இது எவ்வளவு மலிவான செயல்" என நடிகர் நானி பெயரை டேக் செய்து குறிப்பிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் மல்லிகார்ஜுனய்யா பகிர்ந்த இந்த பதிவுக்கு நானி, ஹாய் நானா படத்தை இயக்கிய ஷௌரியுவ் ஆகியோர் இதுவரை எந்த பதிலும் அளிக்காமல் உள்ளார்கள்.
ஹாய் நானா மற்றும் பீம சேனா நல மகாராஜா படங்கள்
கடந்த 2023இல் வெளியான ஹாய் நானா படத்தில் தெலுங்கு ஹீரோ நானி, மிருணாள் தாக்கூர், கியாரா கன்னா பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். உயிருக்கு ஆபத்தான நோயுடன் போராடும் தனது மகளைப் பாதுகாத்து, அந்த நோயிலிருந்து மீட்க போராடும் சிங்கிள் பாதரின் கதையாக ஹாய் படம் அமைந்துள்ளது. இதில் அறிமுகம் இல்லாத பெண் ஒருவர் சிங்கள் பாதராக வரும் நானி வாழ்க்கையில் நுழைந்த பிறகு நிகழும் மாற்றங்களை எமோஷனலாக சொல்லியிருப்பார்கள். தெலுங்கில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்ற இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்டிரீமிங் ஆகி வருகிறது.
கார்த்திக் சராகுர் இயக்கத்தில் அறுசுவைகளான இனிப்பு, காரம், உப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட ஆறு கதாபாத்திரங்களை வைத்து பீம சேனா நல மகராஜா படம் அமைந்துள்ளது. இந்த படத்தின் பிரதான கதாபாத்திரம் அறிமுகம் இல்லாத நபர் ஒருவரிடன் தனது காதல் கதையை சொல்வது போல் அமைந்துள்ளது.
நானி படங்கள்
தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்து வரும் நானி, வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் ஹீரோவாக இருந்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2023இல் இவரது நடிப்பில் வெளியான தசரா, ஹாய் நானா என இரண்டு படங்களும் ஹிட்டாகின. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டில் வெளியான சரிபோதா சனிவாரம் படமும் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த படம் தமிழில் சனிக்கிழமை என்ற பெயரில் வெளியானது. நானி நடித்த படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பு இருந்து வரும் நிலையில், அவரது படங்கள் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸாகியுள்ளது.
தற்போது ஹிட்: தி தேர்டு கேஸ், தி பாராடைஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நானி படம் மீதான இந்த கதை திருட்டு சர்ச்சை தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்