காந்தாரா பட நடிகர் மரணம்.. மீண்டும் ஒரு உயிரிழப்பை சந்தித்த காந்தாரா படக்குழு.. சோகத்தில் கன்னட திரையுலகம்..
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற கன்னட நடிகர் ராகேஷ் பூஜாரி திடீர் மாரடைப்பால் காலமானார்.

காந்தாரா 2 நடிகர் மரணம்.. மீண்டும் ஒரு உயிரிழப்பை சந்தித்த காந்தாரா 2 படக்குழு.. சோகத்தில் கன்னட திரையுலகம்..
கன்னடத்தில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோவான காமெடி கில்லாடிகளு நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமானவர். இவர், இந்த நிகழ்ச்சியின் 3வது சீசனில் பங்கேற்று வெற்றியாளராக வாகை சூடினார். அவர் தற்போது ரிஷப் ஷெட்டியின் காந்தாரா படத்தில் நடித்தார். இந்நிலையில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற இடத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 34.
ராகேஷ் பூஜாரி மாரடைப்பால் மரணம்
பி.டி.ஐ அறிக்கையின்படி, நடிகரின் குடும்ப வட்டாரங்கள் அவர் 'திடீர் மாரடைப்பால்' இறந்ததாகத் கூறியதாக தெரிகிறது. இவர் நேற்று (மே 11) ஞாயிற்றுக்கிழமை மாலை உடுப்பி அருகே நிட்டேவில் நடந்த திருமண மெஹந்தி விழாவில் பங்கேற்றதாக கூறியது. அப்போது, ராகேஷ் மாரடைப்பு ஏற்பட்டு சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.