கழுத்தை நெரித்த கடன் தொல்லை.. கன்னட சினிமா இயக்குநர் தூக்கிட்டு தற்கொலை! அழுகிய நிலையில் உடல் கண்டெடுப்பு
கன்னட சினிமாவின் பிரபல இயக்குநரான குருபிரசாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. கடன் தொல்லையால் அவர் இறந்திருக்ககூடும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னட சினிமாவில் முக்கிய இயக்குநராக இருந்தவர் இயக்குநர் குருபிரசாத. 52 வயதாகும் இவர் பெங்களுரு அருகே இருக்கும் மதநாயக் என்ற கிராமத்தில் அப்பார்மெண்டில் வசித்து வந்துள்ளார். இதையடுத்து இவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அழுகிய நிலையில் அவர் உடல் கண்டெடுக்கப்பட்டாக கூறப்படுகிறது.
கடன் சுமையால் தற்கொலை?
வாடகை வீட்டில் வசித்து வந்த குருபிரசாத் கடந்த மூன்று நாள்களுக்கு மேலாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார். அவரது வீட்டில் இருந்த துர்நாற்றம் வீசிய நிலையில் கதவை உடைத்து பார்த்தபோது தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது.
நவம்பர் 2ஆம் தேதிதான் இயக்குநரின் பிறந்தநாள். அதே நாளில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்து இறந்து கிடந்த குருபிரசாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.