வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நடிகை சோபிதா..திரையுலகினரை ஆழ்த்திய அதிர்ச்சி! போலீசார் விசாரணை
32 வயது இளம் நடிகையான சோபிதா ஷிவாண்ணா தனது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சோபிதாவின் இறப்புக்கான காரணம் குறித்து தெரியாத நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கொண்டாபூர் பகுதில் அமைந்திருக்கும் தனது அப்பார்மெண்டில் கன்னட நடிகை சோபிதா ஷிவாண்ணா சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், நடிகை தற்கொலை செய்திருக்ககூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கன்னட நடிகை சோபிதா
கன்னட சினிமாக்களில் நடித்து வரும் நடிகையான சோபிதா ஷிவாண்ணா ஹைதராபாத்தில் கொண்டாபூரில் உள்ள அப்பார்ட்மெண்டில் வசித்து வந்துள்ளார். இதையடுத்து இவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சோபிதாவின் உடலை மீடடு பிரேத பரிசோதனைக்காக காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சோபிதாவின் இறப்புக்கான காரணம் குறித்து தெரியாத நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சோபிதாவின் மறைவு கன்னட திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த சோபிதா?
கன்னட திரையுலகில் தனது பன்முகதன்மை கொண்ட நடிப்பாற்றலால் ரசிகர்கள் கவர்ந்திருப்பவர் நடிகை சோபிதா. 2015இல் வெளியான ரங்கா தாரங்கா என்ற படம் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு கன்னடாவில் சூப்பர் ஹிட்டான த்ரில்லர் படமான யூ டர்ன் படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தார்.
உலக அளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலை அள்ளிய கன்னட படமான கேஜிஎஃப் சீரிஸ் படங்களிலும் இவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அத்துடன் கன்னட மொழியில் புகழ் பெற்ற சீரியல்களான மங்கல கெளரி, கிருஷ்ணா ருக்மணி போன்றவற்றிலும் நடித்துள்ளார்.
சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் சோபிதா, இன்ஸ்டாவில் ஏராளமானோர் பின் தொடர்கிறார்கள். பெங்களுருவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி படிப்பை முடித்துள்ள இவர், சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்தார்.
கடன் சுமையால் கன்னட இயக்குநர் தற்கொலை
கடந்த மாத தொடக்கத்தில் கன்னட சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வந்த குருபிரசாத் தான் வசித்து வந்த வாடகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குருபிரசாத் வீட்டில் தரைப்பகுதியில் ரத்தம் சிதறி கிடந்ததோடு, அவரது தலையில் துணி கட்டப்பட்டிருந்தது.
கடன் தொல்லை மற்றும் செக் பவுன்ஸ் வழக்கில் நீதிமன்றம் விசாரணையில் இருந்த குருபிரசாத் மீது மற்றொரு வழக்கு ஜெயாநகர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தவில்லை என இவர் மீது புகாரும் அளிக்கப்பட்டிருந்தது.
பல்வேறு நிதி சிக்கல்களில் சிக்கி மனஅழுதத்தில் இருந்து வந்த இயக்குநர் குருபிரசாத், தூக்கிட்டு தற்கொலை செய்தது கன்னட திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து தற்போது இந்த மாத தொடக்கத்தில் கன்னட சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக திகழும் சோபிதாவின் தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.
மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

டாபிக்ஸ்