ரொம்ப ஓவர்..இதெல்லாம் ரொம்ப தப்பு..சென்சார் போட்ட கண்டிஷன் - ரிலீசுக்கு முன்னரே கங்குவாவுக்கு வந்த சிக்கல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ரொம்ப ஓவர்..இதெல்லாம் ரொம்ப தப்பு..சென்சார் போட்ட கண்டிஷன் - ரிலீசுக்கு முன்னரே கங்குவாவுக்கு வந்த சிக்கல்

ரொம்ப ஓவர்..இதெல்லாம் ரொம்ப தப்பு..சென்சார் போட்ட கண்டிஷன் - ரிலீசுக்கு முன்னரே கங்குவாவுக்கு வந்த சிக்கல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Oct 22, 2024 01:15 PM IST

கங்குவா படத்தின் இரண்டாவது சிங்கிளாக வந்திருக்கும் யோலோ பாடலில் ரொம்ப ஓவர் கவர்ச்சி இருப்பதால், குறிப்பிட்ட காட்சிகளை நீக்குமாறு சென்சார் கண்டிஷன் போட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரொம்ப ஓவர்..இதெல்லாம் ரொம்ப தப்பு..சென்சார் போட்ட கண்டிஷன் - ரிலீசுக்கு முன்னரே கங்குவாவுக்கு வந்த சிக்கல்
ரொம்ப ஓவர்..இதெல்லாம் ரொம்ப தப்பு..சென்சார் போட்ட கண்டிஷன் - ரிலீசுக்கு முன்னரே கங்குவாவுக்கு வந்த சிக்கல்

படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் சில வாரங்களே இருந்து வரும் நிலையில், புரொமோஷன் வேலைகளை படக்குழுவினர்கள் தொடங்கியுள்ளனர்.

இரண்டாவது சிங்கிள் வெளியீடு

பேண்டஸி கலந்த ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தன் ஃபர்ஸ்ட் சிங்களாக ஃபயர் என்ற பாடல், கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாக வரவேற்பை பெற்றன.

இதைத்தொடர்ந்து கங்குவா இரண்டாவது சிங்கிளாக யோலோ என்ற பாடல் வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் விவேகா எழுதியிருக்கும் இந்த பாடலுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அத்துடன் தேவி ஸ்ரீ பிரசாத், லவிதா லோபோ பாடலை பாடியுள்ளார்கள்.

பெப்பியான பார்டி பாடலாக இருக்கும் யோலோ பாடல் படத்தின் கிளைமாக்ஸில் இடம்பெறலாம் என பலரும் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்.

பீஸ் பின்னணியில் இளமை தோற்றத்தில் ஸ்டைலிஷ் லுக்கில் சூர்யா இருக்க, ஹீரோயின் திஷா பதானியின் கவர்ச்சி தரிசனம் பாடலில் இடம்பெறும் என தெரிகிறது. பாடலுக்காக படமாக்கப்பட்டிருக்கும் சில விஷுவல்களும் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் யோலோ பாடலில் இடம்பிடித்திருக்கிறது.

சென்சார் போட்ட கண்டிஷன்

யோலோ பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கும் நிலையில் அதிகம் பேரலால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பாடலில் ஹீரோயின், துணை நடிகைகள் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாக இருந்து வரும் நிலையில், உடலின் பாகங்களை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும் காட்சிகளை நீக்குமாறு படக்குழுவிடம் சென்சார் குழு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பட்ட அந்த காட்சிகளை நீக்கவும் அல்லது மாற்றியமைக்கவும் வேண்டும் என கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படம் இன்னும் சென்சார் செய்யப்படாத நிலையில், சில அளவுக்கு மீறிய கவர்ச்சியுடன் இருக்கும் காட்சிகளை வெளியிட்டிருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

கங்குவா படம் புரொமோஷன்

கங்குவா படத்தின் புரொமோஷன் பணிகளை மும்பையில் படக்குழுவினர்கள் தொடங்கியுள்ளனர். கடந்த சில நாள்களுக்கு ரசிகர்கள் பின்னணியில் சூர்யா எடுத்த செஃல்பி வைரலானது. படத்தின் புரொமோஷனில் சூர்யாவுடன், படத்தின் நாயகி திஷா பதானியும் ஈடுபட்டு வருகிறார்.

டெல்லியில் நடைபெற்ற படத்தின் புரொமோஷனில் சூர்யா, திஷா பதானி, கங்குவா படத்தில் வில்லனாக நடித்த பாபி தியோல் ஆகியோர் பங்கேற்றனர். படத்தின் இசை வெளியீடு வரும் 26ஆம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் மாலை 6 மணிக்கு பிரமாண்டமாக நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

முதல் தமிழ் படமாக கங்குவா சாதனை

சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் கங்குவா படம் வட இந்தியாவில் 3,500 திரையரங்கங்களில் ரிலீஸ் செய்யபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் எந்த ஒரு படமும் இவ்வளவு திரையரங்கங்களில் வட இந்தியாவில் வெளியானது இல்லை. இதன் மூலம் முதல் தமிழ் படமாக வட இந்தியாவில் அதிக திரையரங்குகளில் வெளியாகி கங்குவா சாதனை புரிய இருக்கிறது.

கங்குவா படம்

ரூ.350 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் கங்குவா படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். சூர்யா, பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடிங் கிங்ஸ்லீ, நட்டி நட்ராஜ உள்பட பலரும் நடித்துள்ளார்கள்.

ஏழு நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் 35 மொழிகளில் வெளியாகவுள்ளது. கங்குவா திரைப்படத்தில் இந்திய சினிமாவின் மிகப்பெரிய போர்க் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது எனவும், இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போர் புரிவதுபோல் நடித்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

படம் இருவேறு பழங்குடியினர் கூட்டத்துக்குள் நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாகியுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த கதையாக எடுக்கப்பட்டுள்ளது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.