"எதிர்கொள்வோம், எதிரிகொள்வோம்"..இரண்டு மாறுபட்ட லுக்! துரோகம், உயிர்தெழுதல், கெளரவம் - கங்குவா ரிலீஸ் ட்ரெய்லர்
சூர்யாவின் இரண்டு மாறுபட்ட லுக், துரோகம், உயிர்தெழுதல், கெளரவம் என்ற வரிகளுடன், தெறிக்க விடும் அனல் பறக்கும் காட்சிகளுடன் கங்குவா ரிலீஸ் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

"எதிர்கொள்வோம், எதிரிகொள்வோம்"..இரண்டு மாறுபட்ட லுக்! துரோகம், உயிர்தெழுதல், கெளரவம் - கங்குவா ரிலீஸ் ட்ரெய்லர்
சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் கங்குவா படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் ட்ரெயலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டு லுக்கில் சூர்யா
சத்தியம் மற்றும் அதிகாரம் மிக்க தேசத்தில், விரியும் ஒரு தீர்க்க தரிசனம். துரோகம், உயிர்தெழுதல், கெளரவம் என்ற வரிகள் ட்ரெயல்ரில் தோன்ற, சூர்யா கங்குவா தேசம் மற்றும் தற்போதைய லுக் என இரு தோற்றங்களில் தோன்றுகிறார்.
அத்துடன், எதிர்கொள்வோம், எதிரிகொள்வோம் என்ற வசனத்தை ஆக்ரோஷமாக பேசியுள்ளார். ஏற்கனவே படத்தின் டிரெய்லர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான நிலையில், தற்போது படத்தின் ரிலீஸுக்கு முன்னர் இந்த ரிலீஸ் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
