சூர்யா ரசிகர்கள் ஹாப்பி..வண்டியை கிளப்புங்கள்..கங்குவா படத்துக்கு அதிகாலை 4 மணி ஷோ அனுமதி
கங்குவா படத்துக்கு அதிகாலை 4 மணி ஷோவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது சூர்யா ரசிகர்கள் ஹாப்பி தகவலாக மாறியுள்ளது. விரைவில் படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியிடப்பட இருக்கிறது.
தீபாவளிக்கு பெரிய நடிகர்கள் படங்கள் எதுவும் வெளிவராத நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன், ஜெயம் ரவி நடித்த பிரதர், கவின் நடித்த பிளடி பக்கர் ஆகிய படங்கள் வந்துள்ளன. இதுதவிர தெலுங்கில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியிருக்கும் லக்கி பாஸ்கர் தமிழிலும் வெளியாகியிருக்கிறது.
இதில் பிரதர் படம் தவிர மற்ற படங்களுக்கு நேர்மறையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அத்துடன் அமரன், லக்கி பாஸ்கர் படங்களுக்கு இடையே பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்த் சூழ்நிலையில் தீபாவளிக்கு அடுத்தபடியாக வெளியாக இருக்கும் பெரிய படமாக சூர்யா நடித்திருக்கும் கங்குவா படம் உள்ளது. பேண்டஸி கலந்த ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்த படம் நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி தவிர உலக அளவில் 38 மொழிகளில் படம் வெளியாக இருக்கிறது.
அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி
இதற்கிடையே படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து படத்தின் அதிகாலை 4 மணி காட்சிக்கு அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடாகாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஹாப்பியாக உள்ளனர்.
அதேநேரம் தமிழ்நாட்டில் சமீப காலமாக எந்த படத்துக்கும் அதிகாலை காட்சி அனுமதி அளிக்கப்படாத நிலையில், கங்குவா படக்குழுவினர்கள் சார்பில், அரசிடம் மனு அளித்திருப்பாக கூறப்படுகிறது. மற்ற மாநிலங்களில் அனுமதி கிடைத்திருப்பதால், தமிழ்நாட்டிலும் அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக படக்குழுவினரும், ரசிகர்களும் நம்பியுள்ளனர்.
பிரமாண்டமாக நடந்த இசை வெளியீடு
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் கங்குவா படத்தின் இசை வெளியீடு கடந்த 26ஆம் தேதி சென்னையில் வைத்து பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர்கள் கலந்து கொண்டு கங்குவா படம் குறித்து பல்வேரு விஷயங்களை பேசினர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் கங்கும் இந்திய மொழிகள் தவிர உலகம் முழுவதும் மொத்தம் 38 மொழிகளில் ரிலீஸ் ஆக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா நடிப்பில் மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் கங்குவா, வட இந்தியாவில் 3 ஆயிரம் திரையரங்குகளுக்கு மேல் வெளியாக இருக்கும் முதல் படம் என்ற பெருமையை பெறவுள்ளது.
இந்த படத்தில் பாலிவுட் நாயகி திஷா பதானி ஹீரோயினாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகரான பாபி தியோல் வில்லனாக நடித்திருக்கிறார். இரண்டு பழங்குடி மக்களுக்கு இடையே நிகழும் மோதலை அடிப்படையாக கொண்டு படத்தின் கதை அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், விரைவில் படத்தின் ரிலீஸ் ட்ரெய்லர் வெளியிடப்படும் என எதர்பார்க்கப்படுகிறது.
கங்குவா புதிய அனுபவம்
சூர்யா, ஹாலிவுட் படங்களான 'பிரேவ்ஹார்ட்', 'லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்', 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்', 'அபோகாலிப்டோ' போன்ற படங்களை நாம் அனைவரும் ரசித்தோம். இந்த படங்களின் கதை, மேக்கிங்கில் மயங்கி பலமுறை பார்த்திருக்கிறோம். இப்படிப்பட்ட படங்களை எப்போது செய்யப் போகிறோம் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாக கங்குவா படத்தை உருவாக்கியுள்ளோம்.
சில 100 வருடங்கள் பின்னோக்கிச் சென்று அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து சிக்கலான சூழ்நிலையை மக்கள் அனுபவித்தால் என்ன நடக்கும் என்ற இயக்குநர் சிவாவின் யோசனையில் இந்த படம் உருவானது" என்றார்.
சிவா க்ரீன் மேட் ஷாட்களில் அசத்தும் இயக்குநராக சிறுத்தை சிவா இருக்கிறார். விஷுவலாக அவர் கதை சொல்வதில் மிகவும் திறமையானவராக இருக்கிறார். திரையரங்கில் ரசிகர்கள் வெளிப்படுத்தும் தருணங்களை வெகுவாக விரும்புகிறார். எனவே அனைத்தையும் ஒன்றாக இணைத்து 'கங்குவா' படத்தை உருவாக்கியுள்ளார்" என்று கூறினார்.