Kangana: பெண்கள் அதிக வீட்டு வேலை செய்யணும் என்ற அம்மா.. முட்டாள்தனம் என நினைத்தேன்.. கங்கனா வெளிப்படை பேச்சு
Kangana: நடிகை கங்கனா தனது குழந்தைப் பருவத்தைப் பற்றியும், அவரது தாயார் தன்னிடம் சொன்னதைப் பற்றியும் நினைவுகூர்ந்து பேசியிருக்கிறார்.

Kangana: பெண்கள் வீட்டு வேலைகளில் அதிக நேரம் செலவு செய்ய வேண்டும் என்று தனது தாய் தன்னிடம் கூறிய நாட்கள் இருந்ததாக நடிகை கங்கனா ரனாவத் ஒப்புக் கொண்டுள்ளார்.
ப்ரூட் இந்தியா என்ற ஒரு ஊடகத்தில் நேர்காணலின் போது, இதுபோன்ற விஷயங்களைச் சொல்வது தனது தாயின் முட்டாள்தனம் என்று தான் நினைத்ததாக நடிகை கங்கனா ரனாவத் கூறியிருக்கிறார்.
கங்கனா ரனாவத் என்ன சொன்னார்:
இதுதொடர்பாக நடிகை கங்கனா ரனாவத் கூறியதாவது, "என் அம்மா அடிக்கடி ஒன்றை சொல்வார். ஒரு பெண்ணாக பிறந்தால், வீட்டு வேலைகளில் அதிக நேரத்தை முதலீடு செய்ய வேண்டும். குறிப்பாக, ஊறுகாய் தயாரிப்பது முதல் நெய் தயாரிப்பது வரையும், வீட்டில் காய்கறிகளை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்தும் அறிந்திருக்க வேண்டும் என்பார். அப்போது ஏன் நமது அம்மா இப்படி முட்டாள்தனமா பேசுறாங்கன்னு நினைச்சேன். அப்படி இருப்பதால் நமக்கு என்ன பிரயோஜனம் இருக்கப்போகிறது என்று நினைத்திருக்கிறேன்" என்று நடிகை கங்கனா ரனாவத் தன் சொந்த வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயத்தைப் பகிர்ந்து இருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய நடிகை கங்கனா ரனாவத் கூறுகையில், "நாட்டின் இளைய மற்றும் பணக்கார பெண்களில் நானும் ஒருத்தி என்று நினைத்தேன். ஆனால் இன்று அதையே சொல்கிறேன். இதுதான் பெண்களின் பரிணாம வளர்ச்சி என்று நினைக்கிறேன். இப்போது எனது வீட்டு வேலைகள் பற்றி அறிந்திருப்பது நல்லது என்று நினைக்கிறேன்.
'நீ பெண்ணாகப் பிறக்கவில்லை, பெண்ணாக வளர்கிறாய்' என்ற ஒரு மேற்கோளைப் படித்தேன். இன்று, என் அம்மா மகிழ்ச்சியாக இருக்கிறார். நான் முதிர்ச்சியடைந்து புத்திசாலியாகிவிட்டதாக அவர் நினைக்கிறார்'’ என நடிகை கங்கனா ரனாவத் கூறியிருக்கிறார்.
கங்கனாவின் கடைசிப்படம்:
எமர்ஜென்சி படத்தில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்து இருந்தார். இப்படம் ஜனவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்திரா காந்தி 1975 முதல் 1977 வரை 21 மாதங்களுக்கு நெருக்கடி நிலையை அறிவித்த காலகட்டத்தையும் அதன் விளைவுகளையும் ஆராய்ந்தது, எமர்ஜென்சி திரைப்படம். இதில் அனுபம் கெர், ஷ்ரேயாஸ் தல்படே, விசாக் நாயர், மிலிந்த் சோமன் மற்றும் மறைந்த நடிகர் சதீஷ் கௌசிக் ஆகியோரும் நடித்திருந்தனர்.
மேலும் படிக்க: கங்கனா நடித்த இந்திரா காந்தி திரைப்படம் எப்படி உள்ளது
மேலும் படிக்க: எமர்ஜென்ஸி திரைப்படத்தின் ஓடிடி நிலவரம்
மேலும் படிக்க: கங்கனா ரனாவத்தின் பகடி பேச்சு
கங்கனா தொடங்கிய உணவகம்:
இப்போது, கங்கனா ரனாவத் மணாலியில் ’தி மவுண்டன் ஸ்டோரி’ என்ற புதிய உணவகத்தைத் திறந்துள்ளார். எதிர்காலத்தில் ஒரு கஃபே திறக்க விரும்புவதைப் பற்றி அவர் ஒரு பழைய நேர்காணலில் இதனை பேசியிருந்தார். முன்னதாக, 2013ஆம் ஆண்டு, நடந்த நட்சத்திர நேர்காணலில், நடிகை தீபிகா படுகோனே உட்பட பலர் கலந்துகொண்ட ‘ரவுண்ட் டேபிள்’ நட்சத்திரப் பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் 10 ஆண்டுகளில் உங்களை எங்கே பார்ப்பீர்கள் என்று நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேட்டபோது, ‘’ஒரு உணவகத்தைத் திறக்க விரும்புகிறேன்'' என்று கங்கனா கூறியிருந்தார். அதனை தற்போது நடிகை கங்கனா ரனாவத் சாத்தியப்படுத்தியிருக்கிறார்.
தமிழில் அசத்திய கங்கனா:
தமிழில் கங்கனா தாம் தூம் படத்தில் ஜெயம் ரவியுடன் சேர்ந்து நடித்து இருப்பார். அதன்பின் சந்திரமுகி 2 திரைப்படத்திலும், தலைவி என்னும் படத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலில் கங்கனா:
பாலிவுட்டில் பிரபல நடிகையான பின் கங்கனா ரனாவத், இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மக்களவையில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பி.ஆனார்.
