Bilkis Bano case: மூன்று ஆண்டுகள் ஆராய்ச்சி! பில்கிஸ் பானோ கதை - கங்கனா பாஜக ஆதரவாளர் என விலகிய பிரபல தயாரிப்பு நிறுவனம்
பில்கிஸ் பானு சம்பவம் பற்றி கதை என்னிடம் ரெடியாக இருக்கிறது என்ரு பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் கூறியுள்ளார்.

2002 குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானோவை பாலியல் பலாத்காரம் செய்து அவரது குடும்பத்தினரை கொன்ற 11 குற்றவாளிகளை விடுவிப்பதற்கான குஜராத் அரசின் முடிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து பில்கிஸ் பானோ கதையை படமாக்குவது தொடர்பாக எக்ஸ் தளத்தில் ஒருவர் தனது பெயரை டேக் செய்து பதிவுட்ட பதிவுக்கு, பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், நீண்ட நாள்களாக இப்படியொரு படத்தைத் தயாரிக்க விரும்பினேன். இந்த கதை குறித்து மூன்று ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து அதில் பணியாற்றியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், " பில்கிஸ் பானோ கதையை படமாக்க விரும்பிகிறேன். அதற்கான திரைக்கதை தயாராக உள்ளது. மூன்று ஆண்டுகள் வரை ஆராய்ச்சி செய்து பணியாற்றியுள்ளேன்.
ஆனால் நெட்பிளிக், ப்ரைம் விடியோ உள்பட ஒடிடி தளங்களும், பல பெரிய தயாரிப்பு நிறுவனங்களும் அரசியல் உள்நோக்கம் கொண்ட படங்களை உருவாக்குவது குறித்த வழிகாட்டுதல்கள் தங்களது நிறுவனத்தில் இல்லை என தெரிவித்தனர். கங்கனா பாஜகவை ஆதரிப்பதால் நாங்கள் அவருடன் பணியாற்ற விரும்பவில்லை என ஜியோ சினிமா கூறியதாகவும், ஜீ நிறுவனம் இணைப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளது. எனது விருப்பங்கள் என்ன?"என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கங்கனாவின் பெயரை குறிப்பிட்டு, "கங்கனா மேடம், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் உங்கள் ஆர்வம் மிகவும் ஊக்கமளிக்கிறது! பில்கிஸ் பானோவின் கதையை சக்திவாய்ந்த படமாமாக உருவாக்க ஆர்வமாக உள்ளீர்களா? பில்கிஸ் பானோவுக்காகவும், பெண்ணியத்தை போற்றவும், குறைந்தபட்ச மனிதாபிமானத்துக்காக இதை செய்வீர்களா?" என எக்ஸ் பயனாளர் கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
பாலிவுட் டாப் நாயகியாக இருந்து வரும் கங்கனா, தயாரிப்பாளர், இயக்குநராகவும் இருந்து வருகிறார். இவரது நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டில் வெளியான தேஜஸ் அட்டர் பிளாப் ஆனது. அதே போல் தமிழில் இவரது நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 படமும் சரியாக போகவில்லை.
இதைத்தொடர்ந்து இந்த ஆண்டில் இவர் நடித்து, இயக்கியிருக்கும் எமர்ஜென்சி என்ற படம் வெளியாகவுள்ளது. மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய எமர்ஜென்சி காலத்தில் மையப்படுத்திய கதையம்சத்தில் படம் உருவாகியுள்ளது. படத்தில் கங்கனா இந்திரா காந்தியாக நடித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்