Kangana Ranaut:கீரவாணி இசையில் 'ராரா சரசகு ராரா'!சந்திரமுகி 2 ரிகர்சலில் கங்கனா
கோல்டன் குளோப் விருதை வென்ற எஸ்எஸ் கீராவாணி இசையில் உருவாக இருக்கும் சந்திரமுகி 2 கிளைமாக்ஸ் பாடலுக்கான ரிகர்சலில் ஈடுபட்டுள்ளார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005இல் வெளியாகி சூப்பர் ஹிட்டான சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் கதையின் நாயகனாக ராகவா லாரனஸ் நடித்து வருகிறார். கதாநாயகியாக கங்கனா ரனாவத் நடிக்கிறார். முதல் பாகத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் கலக்கிய வடிவேலு இந்த பாகத்தில் நடிக்கிறார்.
ட்ரெண்டிங் செய்திகள்
சந்திரமுகி படத்தில் கிளைமாக்ஸில் இடம்பிடித்த ராரா சரசகு ராரா என்ற பாடல் ஹைலைட்டாக அமைந்ததோடு, ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதையடுத்து இந்த பாகத்தில் அதேபோன்றதொரு பாடல் கிளைமாக்ஸில் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக கோல்டன் குளோப் விருது வென்ற எஸ்எஸ் கீரவாணி இசையமைப்பில் உருவாகியிருக்கும் இந்தப் பாடலுக்கான ரிகர்சலில் கங்கனா ரனாவத் ஈடுபட்டு வருகிறார்.
இதுதொடர்பாக கங்கனாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கை நிர்வகிப்பவர்கள் பதிவிட்டுள்ள டுவிட்டில், " கலா மாஸ்டர் நடன அமைப்பில் சந்திரமுகி 2 கிளைமாக்ஸ் பாடல் ரிகர்சலை தொடங்கியுள்ளோம். கோல்டன் குளோப் விருது வெற்றியாளர் எஸ்எஸ் கீரவாணி இசையில், இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் பங்கெடுப்பது மிகப் பெரிய கெளரவம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்திரமுகி 2 படத்தில் ரஜினிகாந்த் நடிக்காத நிலையில், ராகவா லாரன்ஸ் பிரதான கதாபாத்திரத்திலும், சந்திரமுகியாக ஜோதிகா தோன்றிய கேரக்டரில் கங்கனாவும் நடிக்கிறார்கள். படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் பற்றிய தகவல் தெரிவிக்கப்படாமலேயே உள்ளது.
பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமாக வெளிவந்த தலைவி படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் தோன்றி தனது அற்புதமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். இதன்பின்னர் தற்போது மற்றொரு சூப்பர்ஹிட் தமிழ் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சந்திரமுகி 2 குறித்த அறிப்பு 2020ஆம் ஆண்டிலேயே வெளிவந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு தள்ளிபோனது. தற்போது படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படும் நிலையில், வரும் கோடை விடுமுறையில் சந்திரமுகி 2 படத்தில் ரிலீஸ் செய்வதற்கான முயற்சியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.