கனகவல்லி சொன்ன வார்த்தை.. எழிலால் வருத்தத்தில் சுடர் - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்
கனகவல்லி சொன்ன வார்த்தை.. எழிலால் வருத்தத்தில் சுடர் - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் குழந்தைகள் சுடரை புரிந்து கொள்ளாமல் சத்தமிட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
சுடருக்கு குங்குமம் வைக்கும் எழில்
அதாவது, சுடர் இந்துவிடம் வருத்தப்பட்டு பேச இந்து எல்லாம் கூடிய சீக்கிரம் மாறும், இந்த வாழ்கை உனக்கு பிடிச்ச மாதிரி ஆகும் என்று சொல்கிறாள். அடுத்து சுடர் கோயிலுக்கு ரெடியாகி கனகவல்லியை கோயிலுக்கு அழைக்க அவள் உடம்பு முடியாததால் வரவில்லை என்று சொல்கிறாள்.
அடுத்து எழில் கீழே இறங்கி வர கனகவல்லி பூஜையறையில் இருந்து குங்குமத்தை எடுத்து வந்து சுடருக்கு வைத்து விட சொல்ல எழில் முடியாது என்று மறுக்க கனகவல்லி வச்சி தான் ஆகணும் என்று உறுதியாக இருக்க எழில் வேண்டா வெறுப்பாக குங்குமம் வைத்து விடுகிறான்.
சுடர், எழில் இடையே வாக்குவாதம்
அடுத்து போகும் போது சுடரை கோயிலில் இறக்கி விட்டு போக சொல்ல, எழில் மறுக்க முடியாமல் அழைத்து செல்கிறான். காரில் போகும் போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது. ஹாஸ்பிடலில் டாக்டர்கள் எழிலை பார்க்க வந்து ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்திருப்பதாவும் நீங்க சுடருடன் வந்து மேடை ஏறி பேச வேண்டும் என்று அழைப்பு கொடுக்க எழில் மறுக்க முடியாமல் சம்மதம் சொல்கிறான்.
இந்த பக்கம் சுடரின் அப்பா சுடருக்கு போன் செய்து அவளை பார்க்க வருவதாக சொல்ல சுடர் இந்த விஷயத்தை கனகவல்லியிடம் சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
நினைத்தேன் வந்தாய் தொடர்
ஜீ தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் நூறெல்லா சாவாசம் என்ற சீரியலின் தமிழ் ரீமேக் தான் நினைத்தேன் வந்தாய். கடந்த ஜனவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் பிக் பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராமன், அபிராமி வெங்கடாச்சலம் முறையே எழில் மற்றும் சுடர் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இதுவரை 150க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
பின்னணி கதை
மனைவி இந்துமதியின் மரணத்துக்குப் பிறகு எழில் மனமுடைந்து இருக்கிறார். கிராமத்து பெண்ணான சுடர்விழி, அவரது குழந்தைகளின் பராமரிப்பாளராக அடியெடுத்து வைக்கிறார். ஆனால் எழில் மற்றும் அவரது குழந்தைகளின் இதயங்களில் உள்ள வெற்றிடத்தை சுடர்விழி நிரப்புகிறாரா என்பது தான் இந்த சீரியலின் கதையாக அமைந்துள்ளது. ஜீ5 ஓடிடி தளத்தில் இந்த சீரியல் ஸ்டிரீமிங் ஆகி வருகிறது.
ஜீ தமிழ் பிற சீரியல்
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிகம் பேரால் ரசிக்கப்படும் சீரியலாக கார்த்திகை தீபம் இருந்து வருகிறது. கடந்த 2022 முதல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. ஜீ பங்களா டிவியில் ஒளிபரப்பான கிருஷ்ணாகோயில் சீரியலின் ரீமேக்காக கார்த்திகை தீபம் உள்ளது.
இந்த சீரயலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் , அர்திகா பிரதான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். விசித்ரா, மீரா கிருஷ்ணன், நடிகர் ராஜேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்தித்தில் தோன்றுகிறார்கள். விஜயகுமார், வனிதா விஜயகுமார், வடிவுக்கரசி சிறப்பு வேடத்தில் நடிக்கிறார்கள்.