Kanaa vs Everyone: வாழ்க்கையில ஒரே கஷ்டமா ? - “கனா vs Everyone” சீரிஸ் பாருங்க! - முழு விபரம் இங்கே!
IMDb-ல் அதிக விமர்சனம் செய்யப்பட்டு, 9.4 என சிறந்த மதிப்பிடப்பட்ட இந்த டிஜிட்டல் தொடரானது, கனவுளைப் பற்றிய தேடலையும் மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத தடைகளை எதிர்கொள்ளும் விடாமுயற்சியின் வலிமையையும், பறைசாற்றும் ஒரு கதையாக இருக்கிறது.
இந்திய டிஜிட்டல் உள்ளடக்க வெளியின் பரபரப்பான உலகில், “கனா vs Everyone” வெளியீட்டின் மூலம், உத்வேகம் மிகுந்த தொடர் ஒன்று வெளியாகி இருக்கிறது.
வடக்கில் இருந்து வைரல் ஃபீவர் மற்றும் தெற்கில் இருந்து ட்ரெண்ட் லவுட் ஆகிய இரண்டு டிஜிட்டல் ஜாம்பவான்களும் இதை இணைந்து வழங்குவதோடு, இந்த விறுவிறுப்பான தொடரின் கதை, அனைத்து வயதினரையும் பிரதிபலிக்கும் விதத்தில், அதன் நேர்த்தியான கதாபாத்திரங்கள், உலகளாவிய கருப்பொருள்கள் மூலம் தமிழ் பார்வையாளர்களையும் கவரும் என்று உறுதியளிக்கிறார்கள்.
இந்திப் படைப்பான ‘சப்னே vs Everyone’ மூலம் ஈர்க்கப்பட்ட ட்ரெண்ட் லவுட், தி வைரல் ஃபீவருடன் கூட்டு சேர்ந்து அதன் படைப்பு தன்மை மாறாமல், இதனை தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறது.
IMDb-ல் அதிக விமர்சனம் செய்யப்பட்டு, 9.4 என சிறந்த மதிப்பிடப்பட்ட இந்த டிஜிட்டல் தொடரானது, கனவுளைப் பற்றிய தேடலையும் மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத தடைகளை எதிர்கொள்ளும் விடாமுயற்சியின் வலிமையையும், பறைசாற்றும் ஒரு கதையாக இருக்கிறது.
பரபரப்பான கலாச்சாரத்துடன் கூடிய வேகமான நகர்ப்புறப் பகுதியின் பின்னணியில் அமைக்கப்பட்ட, கனா vs Everyone தொடர் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த உலகில், தங்கள் சொந்த பாதையை செதுக்க தீர்மானித்த இரண்டு இளைஞர்களின் பயணத்தை பற்றிய கதை ஆகும்.
"கனா vs Everyone" தொடரில் மனதைக் கவரும் அம்சங்களில் ஒன்றாக, தாய்க்கும் மகனுக்கும் இடையிலான சிறப்பான பிணைப்பு இருக்கும் என்கிறார்கள்.
அவர்கள் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அசைக்க முடியாத ஆதரவும், நிபந்தனையற்ற அன்பும், ஒரு வலுவான குடும்பக் கதையில், கஷ்டமான மற்றும் தளர்வான சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் ஆதரவாக நிற்பதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன.
கூடுதலாக, கனா vs Everyone தொடரானது வாழ்க்கை என்றழைக்கப்படும் போரில், சக ஊழியர்களுக்கு இடையிலான நட்புறவையும், ரியல் எஸ்டேட் மாஃபியாவின் இருண்ட பக்கங்களையும், சாத்தியமற்ற வழிகளில் சில அம்சங்களை பயன்படுத்தும் மோசமானவர்களை பற்றி தெரிந்து கொள்ளவும் உதவுகிறது.
நீங்கள் இணைய தொடர்களை அதிகமாகப் பார்ப்பவராக இருந்தாலும், நல்ல படைப்பின் ரசிகராக இருந்தாலும் அல்லது உத்வேகத்தைத் தேடும் ஒருவராக இருந்தாலும், கனா vs Everyone குடும்பத்துடன் கட்டாயம் பார்க்க வேண்டிய தொடராகும்.
29-மார்ச்-2024 அன்று மாலை 6 மணிக்கு, பீயிங் தமிழன் யூடியூப் பக்கத்தில் பிரத்யேகமாக கனா vs Everyone-ன் முதல் எபிசோடு வெளியாகி இருக்கிறது.
இனிவரும் அடுத்தடுத்த எபிசோடுகள் ஒவ்வொன்றாக ஒவ்வொரு வாரமும் வெளியாகும். முன்னெப்போதும் இல்லாத வகையில் முன்னேறவும், உயர்த்தப்படவும், உத்வேகம் பெறவும் தயாராகுங்கள்
முன்னதாக, வேற்று மொழிகளில் வெளியான போதும், எல்லாதரப்பு மக்களிடமும் வரவேற்பை பெற்ற சில முக்கியமான திரைப்படங்கள் இம்மாதம் ஓடிடியில் வெளியாக இருக்கின்றன. அவை எந்தெந்த திரைப்படங்கள், எந்தெந்த ஓடிடியில் அவை வெளியாக இருக்கின்றன உள்ளிட்ட விபரங்களை இங்கு பார்க்கலாம்.
நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு, ஷ்யாம் மோகன் உட்பட பலர் நடித்த மலையாள படம் ‘பிரேமலு’. பிப்ரவரி 9 ம் தேதி வெளியான இந்த திரைப்படம் மக்களிடம் அமோகமான வரவேற்பை பெற்ற நிலையில், இந்தப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.
அந்த வகையில், இப்படம் இம்மாதம் 12-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியிடப்பட உள்ளது. படத்தை மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் பார்க்கும் வசதியும் இருக்கிறது.
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவானதாகவும், உலகம் முழுவதும் இப்படம் ரூ.130 கோடி வரை வசூல் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
மலையாளத்தில் இயக்குநர் சிதம்பரம் எஸ் பொடுவல் இயக்கத்தில், கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். இந்தப்படத்திற்கு கேரளா மட்டுமில்லாமல் தமிழகத்திலும் அமோக வரவேற்பு கிடைத்தது. இந்தப்படம் உலக அளவில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்தப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகுமென ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்தத்திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளியாகும்என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜனவரி 2ம் தேதி பிரசாந்த் வர்மா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஹனுமான். மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்தத்திரைப்படம் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இந்தப் படம் வரும் 5ம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது. தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆக இருப்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான லால் சலாம் படம் எவ்வளவு பெரிய சோகத்தை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த இந்த பான் இந்தியா திரைப்படத்தில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஹீரோக்களாக, ரஜினி கெஸ்ட் ரோலில் தோன்றினார். இந்த திரைப்படம் சன் நெக்ஸ்டில் ஏப்ரல் 12ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் நடிகர் ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் போன்ற பிற துறைகளில் நடித்துள்ள சைரன் திரைப்படம் ஏப்ரல் 11 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வருகிறது.
உண்மையில், இந்த படம் தியேட்டர்களுக்கு பதிலாக நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று முதலில் செய்திகள் வந்தன, ஆனால் பின்னர் அது தியேட்டர்களிலும் வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்